கரிம வேதியியல் அல்லது சேதன இரசாயனம், (Organic Chemistry) என்பது வேதியியலின் ஒரு துணைப் பகுதியாகும். இது கரிம (Carbon) அணுக்கள் மற்றும் கரிம சேர்மங்கள் ஆகியவற்றால் ஆன வேதிப்பொருட்களின் அமைப்பு, இயல்புகள், வேதிவினைகள் பற்றிய இயல் ஆகும். நன்கு அறியப்பட்ட கரிமப் பொருள் மரக்கரி ஆகும். அச்சொல்லில் இருந்து கரிம வேதியியல் என்ற சொல் பாவனைக்கு[1] (பயன்பாட்டிற்கு) வந்துள்ளது.
கரிம வேதிப்பொருட்களின் அமைப்பு பற்றிய கல்வியானது நிறமாலையியலை பயன்படுத்தி இயற்பியல் மற்றும் வேதியியல் வழிமுறைகள் மூலம் கரிம சேர்மங்கள் மற்றும் கரிம வேதிப்பொருட்களின் கூட்டமைவு மற்றும் ஆக்க அமைவு ஆகியனவற்றை கண்டறிதலையும் உள்ளடக்கியதாகும். கரிம வேதிப்பொருட்களின் இயல்புகள் பற்றிய கல்வியானது தூய்மையான நிலை,திரவ நிலை, கலவை நிலை மற்றும் தோற்ற நிலைகளிலுள்ள கரிம வேதிப்பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை கண்டறிதலோடு அதே முறைகளைப் பயன்படுத்தி அவை ஈடுபடும் வேதிவினைகளின் வலுவறிதலையும் உள்ளடக்கியதாகும். கரிம வேதிப்பொருட்களின் வேதிவினைகள் பற்றிய கல்வியானது கோட்பாடுகளின் வழிநின்றும் ஆய்வகங்களில் செயற்கை முறைகளிலும் கரிம வேதிப்பொருட்களை தயாரிக்கும் முறைகள் பற்றியதாகும்.
கரிம வேதியியல் ஆய்வின் பரப்பு ஐதரோகார்பன்கள் தொடங்கி கார்பனை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் அமைப்பில் பங்கேற்கும் பிற தனிமங்களைப் பற்றிய ஆய்வாகவும் நீள்கிறது. மேலும் கரிம வேதியியலானது மருத்துவ வேதியியல், உயிர் வேதியியல், கரிம உலோக வேதியியல், பல்படிமமீச்சேர்ம வேதியியல் மற்றும் பரந்துபட்ட பொருளறிவியலின் பல்வேறு பண்புக்கூறுகள் வரை விரிந்திருக்கிறது.
கரிம கலவைகள் அனைத்தும் புவி வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகின்றன. அவை கட்டமைப்புரீதியில் பல்வேறு வகைப்பட்டனவாக மாறுபட்டு கிடக்கின்றன. கரிம கலவைகளின் பயன்பாடு மகத்தான வரம்புகளை கொண்டுள்ளது. அவை நெகிழி, மருந்து, கச்சா எண்ணெய், உணவு, வெடிபொருள், மற்றும் வண்ணப்பூச்சுகள் உட்பட பல முக்கியமான பொருட்களின் பகுதிப்பொருட்களாகவும் உள்ளன.

No comments:
Post a Comment