Sunday 5 November 2017

அணு

                                            

                                        அணு



                 அணு (atom) என்பது தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச் சிறிய அலகுப் பொருட்கூறு ஆகும்.[1] ஒவ்வொரு திண்மம், நீர்மம், வளிமம், பிளாசுமாவும் நொதுமல்நிலை அல்லது மின்னூட்டமுடைய அணுக்களைக் கொண்டுள்ளது. அணுக்கள் மிகவும் சிறியவை; கட்டாக அவை அளவில் மீட்டரின் 10 பில்லியனில் ஒரு பங்காகும். அதாவது ஆயிரம்கோடியில் ஒரு பங்காகும்.[2] என்றாலும் அணுக்களுக்கு நன்கு வரையறுத்த எல்லைகள் கிடையாது. அவற்றின் உருவளவை வரையறுக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவை வேறுபட்ட மதிப்புகளைத் தந்தாலும் மிக நெருக்கமான மதிப்புகளாக அமைகின்றன .
அணுக்கள் மிகச் சிறியவையாக உள்ளதால் செவ்வியற்கால இயற்பியல் சரியற்ற முடிவுகளையே தந்தது. இயற்பியல் வளர் வளர, நன்கு விளக்கி முன்கணிக்கும் குவைய நெறிமுறைகள் உருவாகின.
ஒவ்வொரு அணுவிலும் ஒரு மைய அணுக்கருவும் அதோடு கட்டுண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்மின்னிகளும் அமைந்துள்ளன. அணுக்கருவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்மின்னிகளும் அதையொத்த எண்ணிக்கையில் நொதுமிகளும் உள்ளன. நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் அணுக்கருனி எனப்படுகின்றன. ஏறக்குறைய 99.94% பொருண்மை அணுக்கருவிலேயே அமைந்துள்ளது. நேர்மின்னிகள் நேர்மின்னூட்டம் கொண்டுள்ளன. எதிர்மின்னிகள் எதிர்மின்னூட்டம் கொண்டுள்ளன. நொதுமிகள் மின்னூட்டம் அற்றவை. நேர்மின்னிகளும், எதிர்மின்னிகளுன் எண்ணிக்கையில் சம்மாக இருந்தால் அணு மின்னியலாக நொதுமல்நிலையில் அமையும். ஒரு அணுவில் நேர்மின்னிகளைவிட எதிர்மின்னிகளின் அளவு கூடினாலும் குறைந்தாலும் அணுவின் ஒட்டுமொத்த மின்னூட்டம் நேர் அல்லது எதிர்மின்னூட்டத்துடன் இருக்கும். இத்தகைய அணுக்கள் அயனிகள் எனப்படும்.
எதிர்மின்னிகள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளால் மின்காந்த விசையால் ஈர்க்கப்படுகின்றன. அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளும் நொதுமிகளும் ஒன்றோடொன்று வேறுவகைப்பட்ட அணுக்கரு விசையால் ஈர்க்கப்படுகின்றன. இது மின்காந்த விசையைவிட வலிமையானது. இது நேர்மின்னூட்டம் உள்ள நேர்மின்னிகளை நெருங்கிவிடாமல் பிரித்து விலக்குகிறது. சிலவேளைகளில் விலக்கும் இயல்புள்ள மின்காந்த விசை அணுக்கரு விசையைவிட வலிமையுற்று அணுக்கருவில் இருந்து அணுக்கருவன்களை வெளியேற்றும். இவ்வகை அணுக்கருச் சிதைவு, தனிம மாற்றத்தால் வேறுபட்ட தனிமத்தை மிஞ்சவைக்கும்.
அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அவ்வணு எந்த வேதித் தனிமத்தைச் சார்ந்த்து என்பதை முடிவு செய்கிறது: எடுத்துக்காட்டாக, அனைத்து செப்பு அணுக்களிளும் 29 நேர்மின்னிகளைக் கொண்டுள்ளன. நொதிமிகளின் எண்ணிக்கை அத்தனிமத்தின் ஓரிடத்தானை வரையறுக்கின்றன.[3] எதிர்மின்னிகளின் எண்ணிக்கை அணுவின் காந்த இயல்புகளை முடிவு செய்கிறது. அணுக்கள் வேதியியற் பிணைப்புகளால் ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறு எனும் வேதிச் சேர்மத்தை உருவாக்கலாம். அணுவின் பிணையும் அல்லது பிரியும் திறமே நாம் இயற்கையில் பார்க்கும் இயற்பியல்/புரநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இது வேதியியலால் ஆயப்படுகிறது.
புடவியின் அனைத்துப் பொருண்மமும் அணுக்களால் அமைவதில்லை. புடவியின் பெரும்பகுதி பொருண்மத்தைவிட (வானியல்)கரும்பொருளாலேயே அமைந்துள்ளது. அதாவது அணுக்களால் அமையாமல் நம்மால் இதுவரை அறியப்படாத துகள்களாலேயே அமைந்துள்ளது

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...