கரிம சேர்மங்கள் அல்லது சேதனச் சேர்வைகளின் வகைகள்
கரிம சேர்மங்கள் அல்லது சேதனச் சேர்வைகள் பிரதானமாக இரண்டு வகைப்படும். அவையாவன:- அலிபாட்டிக் சேர்மங்கள் அல்லது திறந்த சங்கிலித் தொடர் சேர்மங்கள் அல்லது வளையமில்லா சேர்மங்கள்.
- அரோமேட்டிக் சேர்மங்கள் அல்லது மூடிய சங்கிலித்தொடர் சேர்மங்கள் அல்லது வளைய சேர்மங்கள்.
அலிபாட்டிக் [3] சேதனச் சேர்வைகள்
இவ்வகை சேர்மங்களில் கார்பன் அணுக்கள் நேர்கோட்டு அமைப்பிலோ அல்லது கிளை சங்கிலித்தொடர் அமைப்பிலோ நீண்ட சங்கிலியைக் கொண்டிருக்கும்.இவை மூடிய அமைப்பில்லாத திறந்த அமைப்பைக் கொண்டுள்ள கரிம சேர்மங்களாகும். கிரேக்க மொழியில் அலிபாட் என்றால் கொழுப்பு என்பது பொருளாகும். அலிபாட்டிக் சேர்மங்கள் மேலும் நிறைவுற்றவை (ஆல்கேன்கள்)என்றும்,நிறைவுறாதவை (ஆல்கீன்கள்,ஆல்கைன்கள்)எனவும் அலிசைக்ளிக் (வளைய ஆல்கேனகள்),எனவும் பகுக்கப்பட்டுள்ளன.அல்கேன்கள்
காபன் அணுக்களுக்கிடையில் ஒற்றைப் பிணைப்பை மாத்திரம் கொண்ட சேர்வைகள் அல்கேன்களாகும்.அல்கீன்கள்
காபன் அணுக்களிடையே இரட்டைப்பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்வைகள் அல்கீன்களாகும்.அல்கைன்கள்
காபன் அணுக்களிடையே மும்மைப்பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்வைகள் அல்கைன்களாகும்.அரோமேட்டிக் [4] சேதனச் சேர்வைகள்
பென்சீன் வளையத்தைக் கொண்ட சேதனச் சேர்வைகளாகும்தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்டு வகைப்படுத்தல்
தொழிற்பாட்டுக் கூட்டம்
சேதனச் சேர்வையொன்றின் விஷேட இயல்புகள் மற்றும் தாக்கங்களுக்குப் பொறுப்பான அணுக்கள் அல்லது அணுக்கூட்டங்கள் தொழிற்பாட்டுக் கூட்டங்கள் எனப்படும்.சில பிரதான சேர்வைகள்
பின்வரும் அட்டவணை சில பிரதான சேதனச் சேர்வைகளின் விபரங்களைத் தருகிறது.பெயர் | கூட்டம் | சூத்திரம் | கட்டமைப்புச் சூத்திரம் | முன்னொட்டு | பின்னொட்டு | உதாரணம் |
---|---|---|---|---|---|---|
அல்கேன் | அல்கைல் | RH | alkyl- | -ane | எதேன் |
|
அல்கீன் | அல்கீனைல் | R2C=CR2 | alkenyl- | -ene | எதிலீன் (Ethene) |
|
அல்கைன் | அல்கைனல் | RC≡CR' | alkynyl- | -yne | அசெற்றலீன் (Ethyne) |
|
பென்சீன் | பீனைல் | RC6H5 RPh |
phenyl- | -benzene | Cumene (2-phenylpropane) |
|
தொலுயீன் | பென்சைல் | RCH2C6H5 RBn |
benzyl- | 1-(substituent)toluene | Benzyl bromide (α-Bromotoluene) |
|
ஹலோஅல்கேன் | ஹலோ | RX | halo- | alkyl halide | Chloroethane (Ethyl chloride) |
|
ஃபுளோரோஅல்கேன் | ஃபுளோரோ | RF | fluoro- | alkyl fluoride | Fluoromethane (Methyl fluoride) |
|
குளோரோஅல்கேன் | குளோரோ | RCl | chloro- | alkyl chloride | Chloromethane (Methyl chloride) |
|
புரோமோஅல்கேன் | புரோமோ | RBr | bromo- | alkyl bromide | Bromomethane (Methyl bromide) |
|
அயடோஅல்கேன் | அயடோ | RI | iodo- | alkyl iodide | Iodomethane (Methyl iodide) |
|
அல்ககோல் | ஹைட்ரொக்ஸில் | ROH | hydroxy- | -ol | மெதனோல் |
|
கீட்டோன் | காபனைல் | RCOR' | -oyl- (-COR') or oxo- (=O) |
-one | Butanone (Methyl ethyl ketone) |
|
அல்டிகைட் | அல்டிகைட் | RCHO | formyl- (-COH) or oxo- (=O) |
-al | Ethanal (Acetaldehyde) |
|
அசற்றைல் ஹேலைட் | ஹலோஃபோர்மைல் | RCOX | carbonofluoridoyl- carbonochloridoyl- carbonobromidoyl- carbonoiodidoyl- |
-oyl halide | Acetyl chloride (Ethanoyl chloride) |
No comments:
Post a Comment