Sunday, 19 November 2017

சர் ஹம்பிரி டேவி

                        ,
 
  சர் ஹம்பிரி டேவி (Sir Humphry Davy: 17 டிசம்பர், 1778 – 29 மே, 1829)

டேவி 

இங்கிலாந்தில் இயற்கை எழில் கொஞ்சும் பென்சான்ஸ் நகரில் 1778ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் டேவி. தந்தை ஒரு மரச் சிற்பி. 16 வயதில் தந்தையை இழந்த டேவி, பசியினாலும் வறுமையினாலும் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வேலை தேடினார். ஒரு மருத்துவரின் உதவியாளரானார். மருத்துவரிடம் தனக்கென்று தனி அறை ஒன்றினைக் கொடுக்கச் சொல்லி ரசாயன சோதனைகளைச் செய்து பார்த்தார்.
புகழ்பெற்ற ராயல் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் கழகப் பணி கேட்டு, தமது 22ஆம் வயதில் கடிதம் எழுதினார். அப்போது அங்கிருந்த லார்டு ராம்போர்டு என்பவர் உடனடியாக வரச்சொன்னார். டேவியை நேரில் பார்த்ததும், உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது; வயதிலும் மிகவும் சிறியவனாக இருக்கிறாய் என்றார் லார்டு ராம்போர்டு.
தயவுசெய்து என் சொற்பொழிவினைக் கேட்டுவிட்டு, பின்பு வேலை கொடுங்கள் என்று கெஞ்சினார். சரி என்று அனுமதி கொடுத்தார் லார்டு ராம்போர்டு. டேவியின் பேச்சினைக் கேட்டுவிட்டுப் புகழ்ந்தார். ரசாயனப் பேராசிரியராக வேலையில் சேர்த்துக் கொண்டார். தனது அறிவுத் திறமையாலும், பேச்சாற்றலாலும் அறிவியல் கருத்துகளை விதைத்தார் டேவி.
கண்டுபிடிப்புகள்
Davy_lamp
  • பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுரங்ககங்களில் மீதேன் (methane) வாயு தீப்பிடித்து, அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாவது என்பது, மிகச் சாதாரணமாக நடந்து வந்த நிகழ்ச்சி. வெளிச்சத்திற்காகத் தீ விளக்குகளைப் பயன்படுத்தியதாலேயே இவ்விபத்துக்கள் சுரங்கங்களில் நடந்து வந்தன; இவ்விபத்துக்களால் பல சுரங்கத் தொழிலாளர்கள் உயிரழக்கவும் நேர்ந்தது. 1815ஆம் ஆண்டு சர் ஹம்ப்ரி டேவி பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்த பின்னர் மேற் கூறிய விபத்துக்கள் பெருமளவுக்குக் குறைந்து விட்டன என்பது மிகப் பெரிய உண்மை.இங்கிலாந்தின் மிகச் சிறந்த வேதியியல் நிபுணர்களுள் ஒருவராக விளங்கிய டேவி பாதுகாப்பு விளக்கை வடிவமைப்பதற்கு இரு காரணங்களை அடிப்படையானவையாகக் கருதினார். ஒன்று, விளக்கு எரியத் தேவையான உயிர்வளி (oxygen) அதாவது ஆக்சிஜன் அடுத்து விளக்குச் சுடரின் வெப்பப் பரவல். உயிர் வளி விளக்குச் சுடர் எரிவதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது; ஆனால் சுடரிலிருந்து வெளியாகும் வெப்பம் அதனைச் சுற்றியுள்ள தீப்பிடிக்கக்கூடிய வாயுக்களை உடனடியாக எரியூட்டச் செய்து விடும். இதனாலேயே தீ விபத்துக்கள் உண்டாயின. எனவே தமது நுண்ணறிவைப் பயன்படுத்திய டேவி, எண்ணெய் விளக்கின் தீச்சுடரைச் சுற்றி மெல்லிய கம்பி வலையால் தடுப்புச் சுவர் ஒன்றை உருவாக்கினார். இதன் விளைவாக சுடர் எரியத் தேவையான காற்று இடரேதுமின்றிக் கிடைத்தது; அதே வேளையில் சுடரிலிருந்து வரும் வெப்பம் வெளியிலுள்ள வாயுக்களை அடைவதற்குள் வீரியம் குறைந்து, சிதறிப் போயின; இதனால் வெளியேயுள்ள வாயுக்கள் எரிவது தவிர்க்கப்பட்டது. வலைச் சுவரால் விளக்குச் சுடரின் ஒளி சற்று மங்கியிருப்பினும், தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் பார்ப்பதற்குப் போதுமானதாயிருந்தது. தற்போது மின் விளக்குகள் சுரங்கத்தினுள் ஒளி வழங்கப் பயன்படுத்தப்பட்டாலும், டேவி கண்டுபிடித்த பாதுகாப்பு விளக்குகள் முழுமையாக அற்றுப்போய்விடவில்லை. சுரங்கத்தினுள் இருக்கக்கூடிய அபாயமான வாயுக்களைக் கண்டறிவதற்கு இப்பாதுகாப்பு விளக்குகள் இப்போதும் பயன்பட்டு வருகின்றன.
  • அறுவை சிகிச்சையின்போது வலியினால் நோயாளிகள் அவதியுறுவதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கினார். நைட்ரஸ் ஆக்சை டின் மயக்க விளைவைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். துணிச்ச லுடன் அந்த வாயுவை தானே நுகர்ந்து பார்த்தார். மயக்கமடைந்தார். தொடர்ந்து பரிசோதித்து இதன் தன்மைகளை விளக்கிக் காட்டினார். லாஃபிங் கேஸ் எனப்படும் இந்த வாயுவைக் கண்டறிந்த டேவியின் புகழ் உலகெங்கும் பரவியது.
  • 1756-ல் பிரிஸ்டலில் ஃபெனுமாடிக் அமைப்பில் இணைந்த டேவி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒரே வருடத்துக்குள் நைட்ரஸ் ஆக்சைடு குறித்த புகழ்பெற்ற கட்டுரைகளை வெளியிட்டார். இந்த இரண்டு ஆய்வுக் கட்டுரைகளும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 1801-ல் ராயல் இன்ட்டிட்யூட்டில் உரையாற்றினார்.

  • தோல் பதனிடல், வோல்டா மின்கலம் ஆகியவை குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். வேதியியல் கூட்டுப் பொருள்களை மின்னாற் பகுப்பு மூலம் எவ்வாறு பிரிப்பது என்பதை இவர் விளக்கினார். சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றைப் பிரித்துக் காட்டினார்.
  • இந்த அடிப்படையில்,ஆல்கலைஸ்கள் உலோக ஆக்சைடுகளே என்பதை செயல்முறை விளக்கத்துடன் எடுத்துக் கூறினார். வாயுக்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அவை தொடர்பான ஏராளமான ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தன. குளோரின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் ஆகிய பல்வேறு தனிமங்களையும் கண்டறிந்தார்.
  • 1813இல் ஃபாரடே என்னும் அறிவியல் அறிஞர் டேவியின் உதவியாளராகச் சேர்ந்தார். இருவரும் அறிவியல் ஆய்வுக்காக ஐரோப்பியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அயோடின் பற்றி ஆய்வு செய்தனர். வைரம் என்பது ஒரு கரிமப் படிவம் என்று நிரூபித்தனர். ஃபாரடேயின் துணையுடன் ‘வேதியியல் தத்துவத் தனிமங்கள் (Elements of Chemical Philosophy) ‘ என்ற தலைப்பில் டேவி ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மேலும் உப்பு நீரில் செம்பு துருப் பிடிப்பதைப் பற்றியும், எரிமலைச் செயல் பாடுகள் பற்றியும் பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டார்.
  • ரசாயன ஆராய்ச்சிக்கு மின்சாரம் சிறந்த பயன்பாடாக உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியதால், ‘மின்சார ரசாயனத்தின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். ஐயோடின் பற்றி ஆய்வு செய்தார். வைரம் ஒரு கரிமப் படிவம் என்பதை நிரூபித்தார்.
  • சிதைந்த வேதியல் கூட்டுப் பொருட்களின் மீது எலக்ட்ராலிசிஸ் முறையில் செயல்பட்டு அதிலிருந்து பொட்டாசியம், சோடியம், பேரியம், கால்சியம், மக்னீஷியம் ஆகிய மூலப் பொருட்களைப் பிரித்தெடுத்தார்.
பெற்ற விருதுகள் 
1812-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.
புத்தகங்கள்
தனது ஆராய்ச்சி கள், கண்டுபிடிப்புகள் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் அவற்றில் சில
  1. — (1800). Researches, Chemical and Philosophical; Chiefly Concerning Nitrous Oxide, or Dephlogisticated Nitrous Air, and Its Respiration. Bristol: Biggs and Cottle. Archivedfrom the original on 12 May 2006.
  2. — (1812). Elements of Chemical Philosophy. London: Johnson and Co. ISBN 0-217-88947-6.
  3. — (1813). Elements of Agricultural Chemistry in a Course of Lectures. London: Longman.
  4. — (1816). The Papers of Sir H. Davy. Newcastle: Emerson Charnley. (on Davy’s safety lamp)
  5. — (1827). Discourses to the Royal Society. London: John Murray.
  6. — (1828). Salmonia or Days of Fly Fishing. London: John Murray.
  7. — (1830). Consolations in Travel or The Last Days of a Philosopher. London: John Murray.
ராயல் சொசைட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், ஏழு வருடங்கள் தொடர்ந்து இந்தப் பதவியில் பணியாற்றினார்.
மனித குலத்துக்கும் மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய சர் ஹப்ம்ரி டேவி 1929-ம் ஆண்டு, 50-வது வயதில் மறைந்தார்.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...