Monday 13 November 2017

காட்மியம்

காட்மியம் (இலங்கை வழக்கு: கட்மியம், ஆங்கிலம்:Cadmium (IPA: /ˈkædmiəm/) ஓரளவிற்கு அரிதாகவே கிடைக்கும் சிறிதே நீலம் கலந்த வெண்மை நிறமுடைய மென்மையான வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Cd என்பதாகும். இதன் அணுவெண் 48, மற்றும் இதன் அணுக்கருவினுள் 64 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் பிறழ்வரிசை மாழைகளை சேர்ந்த ஒரு மாழை ஆகும். காட்மியம் பொதுவாக துத்தநாகம் உள்ள கனிமங்களுடன் கிடைக்கின்றது. காட்மியம் புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. காட்மியம் பெரும்பாலும் மின்கலங்களிலும், நெகிழி போன்ற பொருட்களில் நிறமிகளாகவும் பயன்படுகின்றது.

பொருளடக்கம்

பிரித்தெடுத்தல்

2005 ஆம் ஆண்டு உலகில் காட்மியம் எடுக்கும் பகுதிகளும் எடுக்கப்படும் காட்மியத்தின் அளவுகளும். பச்சை வட்டம், மிக அதிகமாக எடுக்கப்படும் தென் கொரியா, ஜப்பான் நாட்டின் உறபத்தியை 100 என்று கொண்டு, பிற பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் அளவுகள் அதனுடன் ஒப்பீடாக சுட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மஞ்சள் புள்ளியும் 10, சிவப்பு புள்ளி 1.
ஆண்டுதோறும் உலகில் எவ்வளவு காட்மியம் பிரித்தெடுக்கப்படுகின்றது என்று காட்டும் படம். அண்மையில் ஆண்டுக்கு 20,000 டன் காட்மியம் பிரித்தெடுக்கப்படுகின்றது.
காட்மியம் பெரும்பாலும் துத்தநாகம் உள்ள கனிமங்களில் கலந்த வேற்றுப்பொருளாக உள்ளது. எனவே துத்தநாகம் எடுக்கும் தொழில்முறையில் இது துணை விளைபொருளாகப் பெறப்படுகின்றது. துத்தநாக சல்பைடு என்னும் மாழைமண் (கனிமம்) ஆக்ஸிஜனுடன் சேர்த்து சூடு செய்து துத்தநாக சல்பைடுதனை துத்தநாக ஆக்ஸைடு ஆக மாற்றப்படுகின்றது. பிறகு கரிமத்துடன் சேர்த்து உலையில் இட்டாலோ, அல்லது கந்தகக் காடியில் மின்வேதியியல் கரைசல் முறையில் துத்தநாகம் பிரித்தெடுக்கப்படுகின்றது. காட்மியத்தை (தூய்மையற்ற) துத்தநாகத்தில் இருந்து எடுக்க, காட்மியம் கலந்த துத்தநாகத்தை வெற்றிடப் படிவு செய்து அதில் இருந்து காட்மியம் பெறப்படுகின்றது. மின்வேதியியல் கரைசல் முறையில், காட்மியம் சல்பேட்டு பிரிவுற்று தங்கி விடுகின்றது[1].

குறிப்பிடத்தக்க பண்புகள்

காட்மியம், மென்மையான, நச்சுத்தன்மை உள்ள, எளிதில் தகடாகவல்ல ஒரு மாழை. இதன் வேதியியல் பண்புகள் துத்தநாகத்தை ஒத்ததாக உள்ளது.

பயன்பாடுகள்

காட்மியம் உலோகம்
உலகில் பிரித்தெடுக்கும் காட்மியத்தில் முக்கால் பங்கு நிக்கல்-காட்மியம் மின்கலங்கள் செய்வதற்கும், மீதி கால் பங்கு நிறமிகளாக பல்வேறு பூச்சுகளுக்குப் பயன்படுகின்றது. நெகிழிகளில் நிலைப்படுத்திகளாகவும் (stabilizers) பயன்படுகின்றது. பிற பயன்பாடுகள்:
  • உராய்வைக் குறைக்க மென்மையான இப்பொருள் உருள்தாங்கிகளில் (bearing) பயன்படுகின்றது.
  • 6% காட்மியம் மின்வேதியியல் (மாழைப்) பூச்சுகளில் பயன்படுகின்றது.
  • பல்வேறு ஒட்டு/பற்றுவைப்பு வேலைகலில் ஒட்டுவைப்புப் பொருளாப்பயன்படுகின்றது
  • அணு உலையில், அணுப்பிளவுத் தடுல்லுக்கு கட்டுறுத்தும் பொருளாகப் பயன்படுகின்றது.
  • காட்மியம் செலினைடு என்னும் சேர்மம் சிவப்பு நிறமியாகவும், சல்பைடுகள் மங்கள் நிறமியாகவும் பயன்படுகின்றது
  • காட்மியம் டெலூரைடு என்னும் பொருள் கதிரொளி மின்கலங்களில் பயன்படுகின்றது.
  • இரவில் வெப்பத்தை மட்டும் கொண்டு மக்கள்/ஊர்திகள் நட்மாட்டத்தை அறியப் பயன்படும் அகச்சிவப்பு மின்காந்த அலைகளை உணரவல்ல இரவுக்கண்களாக பயன்படுகின்றது. (அகச்சிவப்பு படக்கருவிகள்). இவை பாதரச-காட்மிய-டெலூரைடு அல்லது மெர்க்குரி-காட்மியம்-டெலுரைடு (HgCdTe ) என்னும் கூட்டுக் குறைக்கடத்திப் பொருளால் செய்யப்படும் கருவிகள் ஆகும்.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...