கால்சியம் காா்பனேட் (CaCO3) என்ற மூலக்கூறு
வாய்ப்பாட்டைக் கொண்டுள்ள வேதிச்சோ்மம் ஆகும். இது பாறைகளில் காணப்படும்
கனிமங்களான கால்சைட் மற்றும் அரகோனைட்(இந்த இரண்டு கனிமங்களையும் கொண்டுள்ள
சுண்ணாம்புக்கல்) ஆகியவற்றில் காணப்படும் ஒரு பொதுப்பொருளாகும். இது
முத்துக்கள், கடல் வாழ் உயிாினங்கள், நத்தைகள் மற்றும் முட்டைகளின் ஓடுகள்
இவற்றில் காணப்படும் முதன்மைப் பகுதிப்பொருள் ஆகும். மருத்துவத்துறையில்
இது ஒரு வயிற்றில் உள்ள புளிப்புத் தன்மையை மாற்றும் பொருளாகவும்,
கால்சியத்திற்கான உப உணவுப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும்
இப்பொருளின் அதிகமான பயன்பாடு ஆபத்தை விளைவிக்கலாம்.
No comments:
Post a Comment