Thursday, 30 November 2017

வேதியியலில் உப்பு (salt) என்பது ஒரு காடியும், காரமும் சேர்ந்து வேதியியல் வினைப்படும் பொழுது நடுமை அடைகையில் உருவாகும் பொருள். உப்புகள் மின்ம முனைப்படும் சேர்மங்கள் ஆகும். உப்புகளில் நேர்மின்மம் கொண்ட நேர்முனையி அல்லது கேட்டயான் (cation) பகுதியும், எதிர்மின்மம் கொண்ட எதிர்முனையி அல்லது ஆனையான் (anion) பகுதியும் கொண்ட ஆனால் மொத்தமாக மின்மம் ஏதுமற்ற, மின்மநடுநிலை கொண்ட ஒரு பொருள். பரவலாக அறிந்த, உணவில் சேர்க்கும் உப்பாகிய சோடியம் குளோரைடு (NaCl) ஓர் உப்பு. இதுபோல வேறு பல குளோரைடுகளும் கரிமமல்லா வேதிப்பொருள்களால் உருவாகும்.

Wednesday, 29 November 2017

கார உப்புகள்

கார உப்புகள் (Alkali salts or basic salts) என்பவை ஒரு வலிமையான காரம் மற்றும் பலவீனமான அமிலம் ஈடுபடும் நடுநிலையாக்கல் வினையில் உருவாகும் உப்புகள் ஆகும்.
சிலவகை உப்புகள் நடுநிலையாக இருப்பது போல் அல்லாமல் கார உப்புகள் அவற்றின் பெயருக்கு ஏற்பவே காரங்களாகச் செயல்படுகின்றன. 

Tuesday, 28 November 2017

பேரியம் குளோரைடு (Barium Chloride) BaCl2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு மிகவும் பொதுவான நீரில் கரையக்கூடிய பேரியத்தின் உப்பாகும். மற்ற பேரியம் உப்புக்களைப் போல, இதுவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். எரியும் போது மஞ்சள் கலந்த பச்சை நிறத்தைச் சுடருக்குத் தருகிறது. இது நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதாகும்.


Sunday, 26 November 2017

கல்ல்சியம் கார்பனேட்

கால்சியம் காா்பனேட் (CaCO3) என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்டுள்ள வேதிச்சோ்மம் ஆகும். இது பாறைகளில் காணப்படும் கனிமங்களான கால்சைட் மற்றும் அரகோனைட்(இந்த இரண்டு கனிமங்களையும் கொண்டுள்ள சுண்ணாம்புக்கல்) ஆகியவற்றில் காணப்படும் ஒரு பொதுப்பொருளாகும். இது முத்துக்கள், கடல் வாழ் உயிாினங்கள், நத்தைகள் மற்றும் முட்டைகளின் ஓடுகள் இவற்றில் காணப்படும் முதன்மைப் பகுதிப்பொருள் ஆகும். மருத்துவத்துறையில் இது ஒரு வயிற்றில் உள்ள புளிப்புத் தன்மையை மாற்றும் பொருளாகவும், கால்சியத்திற்கான உப உணவுப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இப்பொருளின் அதிகமான பயன்பாடு ஆபத்தை விளைவிக்கலாம்.


பொட்டாசியம் பெர்மாங்கனேட் பயன்

பல்லில் கரை போக வழி

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்துகொண்டு வரச்சொல்வது தான்..
நீண்ட நாட்களாக இருக்கும் கறைப்படிவங்களை சுத்தம்செய்வது மிகவும் எளிது.

Friday, 24 November 2017

சோடியம் குளோரைடு

வேதியியலில் உப்பு (salt) என்பது ஒரு காடியும், காரமும் சேர்ந்து வேதியியல் வினைப்படும் பொழுது நடுமை அடைகையில் உருவாகும் பொருள். உப்புகள் மின்ம முனைப்படும் சேர்மங்கள் ஆகும். உப்புகளில் நேர்மின்மம் கொண்ட நேர்முனையி அல்லது கேட்டயான் (cation) பகுதியும், எதிர்மின்மம் கொண்ட எதிர்முனையி அல்லது ஆனையான் (anion) பகுதியும் கொண்ட ஆனால் மொத்தமாக மின்மம் ஏதுமற்ற, மின்மநடுநிலை கொண்ட ஒரு பொருள்.

Thursday, 23 November 2017

கால்சியம் கார்பைடு உபயோகித்து மாம்பழங்களை பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்

கால்சியம் கார்பைடு உபயோகித்து மாம்பழங்களை பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்

கால்சியம் கார்பைடு: இது ஒரு ரசாயனப் பொருள். சுத்த மான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலை யில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். 

Wednesday, 22 November 2017

கல்சியம் கார்பைடு (calcium carbide)

கல்சியம் கார்பைடு (Calcium carbide) என்பது CaC2 என்ற மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். தொழிற்துறையில் இது அசெட்டிலின், கல்சியம் சயனமைடு போன்ற வளிம உற்பத்திகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]
தூய கல்சியம் கார்பைடு நிறமற்றதாகும். எனினும் சந்தையில் உள்ள கல்சியம் கார்பைடு சாம்பல் மற்றும் பழுப்பு நிறமுடையதாக இருக்கும். இதில் 80-85% CaC2 காணப்படும்..

Tuesday, 21 November 2017

கனிம வேதியியல்

கனிம வேதியியல் (Inorganic chemistry) என்பது கரிமம் அல்லாத சேர்மங்கள் மற்றும் கரிமவுலோகச் சேர்மங்கள் முதலானவற்றின் நடத்தைகளையும் அவற்றின் தயாரிப்பு முறைகளையும் விவரிக்கின்ற ஓர் வேதியியல் பிரிவு ஆகும். அசேதன இரசாயணம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இப்பிரிவு மிகவிரிவாக வளர்ச்சியடைந்துள்ள கரிமச் சேர்மங்கள் (பெரும்பாலும் C-H பிணைப்புக் கொண்ட சேர்மங்கள்) தவிர்த்து, அனைத்து வகையான வேதிச் சேர்மங்களையும் ஆராய்கின்றது. C-H பிணைப்புக் கொண்ட சேர்மங்கள் கரிம வேதியியல் என்ற வேதியியல் பிரிவில் ஆராயப்படுகின்றன. இரண்டு துறைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடானது, கரிமவுலோக வேதியியல் என்ற இவற்றின் துணைப்பிரிவு காரணமாக முழுமையில் இருந்து வெகு தொலைவுக்கு விலகியுள்ளது. வினையூக்கி, பொருள் அறிவியல், நிறமிகள், புறப்பரப்புச் செயலிகள், மேற்பூச்சுகள், மருந்துகள், எரிபொருட்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அறிவியல் துறைகளின் ஒவ்வொரு அம்சத்திலும் கரிமவுலோக வேதியியல் பயன்பாடுகளை கொண்டிருக்கிறது [1].
பொட்டாசியம் ஆக்சைடு அயனிச் சேர்மத்தின் கட்டமைப்புடன்
பல கனிமச் சேர்மங்கள் நேர்மின் அயனிகளும் எதிர்மின் அயனிகளும் அயனிப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள அயனிச் சேர்மங்களாகும். மக்னீசியம் குளோரைடு, சோடியம் ஆக்சைடு போன்றவை அயனிச்சேர்மத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும். மக்னீசியம் நேர்மின் அயனியும் (Mg2+) குளோரைடு எதிர்மின் அயனியும் இணைந்து மக்னீசியம் குளோரைடும் சோடியம் நேர்மின் அயனியும் ஆக்சைடு (O2−) எதிர்மின் அயனியும் இணைந்து சோடியம் ஆக்சைடும் உருவாகியுள்ளன. எந்தவொரு உப்பை எடுத்துக் கொண்டாலும் அயனிகளின் மின்சுமைக்கு ஈடாக நடுநிலையாக்கப்படும் வகையில் எதிர் அயனிகளைப் பெற்று உப்பு நடுநிலையில் இருக்குமாறு அமைகிறது. உப்பில் உள்ள அயனிகள் ஆக்சிசனேற்ற நிலை எண்ணால் குறிக்கப்படுகின்றன. நேர்மின் அயனியெனில் அயனியாக்கும் திறனிலிருந்தும், எதிர்மின் அயனியெனில் அணுக்கரு நாட்டத்திலிருந்தும் தாய்த்தனிமங்களிலிருந்து உப்புகளின் உருவாக்கத்தை உய்த்துணர முடிகிறது.
ஆக்சைடுகள், கார்பனேட்டுகள், சல்பேட்டுகள், மற்றும் ஆலைடுகள் போன்றவை கனிமச் சேர்மங்களின் முக்கியமான சில வகைபாடுகளாகும். பல கனிமச் சேர்மங்கள் உயர் உருகுநிலையால் வகைப்படுத்தப்படுகின்றன. கனிம உப்புக்கள் பொதுவாக திட நிலையில் நல்ல கடத்திகள் என்று கருதப்படுவதில்லை. உயர் கொதிநிலையும் படிகமாகும் தன்மையும் கனிமச்சேர்மங்களின் சிறப்பு அம்சங்களாகும். சில உப்புகள் தண்ணீரில் அதிகமாக கரைகின்றன. (சோடியம் குளோரைடு) சில உப்புகள் சரியாகக் கரைவதில்லை. (சிலிக்கன் டையாக்சைடு).
இரட்டை இடப்பெயர்ச்சி வினை கனிம வேதியியலின் எளிய வினை வகையாகக் கருதப்படுகிறது. இரண்டு உப்புக்களை ஒன்றாகக் கலக்கும் போது அவற்றின் ஆக்சிசனேற்ற நிலையில் எந்த மாற்றமும் அடையாமல் அயனிகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. ஒடுக்க-ஏற்ற வேதிவினைகளில் ஒரு வினைபடுபொருள் அதாவது ஆக்சிசனேற்றி அதன் ஆக்சிசனேற்ற நிலையில் குறைகிறது மற்றும் மற்றொரு வினைபடுபொருள் அதாவது ஒடுக்கி, அதன் ஆக்சிசனேற்ற நிலையில் உயர்கிறது. நிகர விளைவு எலக்ட்ரான்கள் பரிமாற்றப்படுகின்றன என்பதே இவ்வினையின் நிகர விளைவாகும். எலக்ட்ரான் பரிமாற்றம் மறைமுகமாகவும் சில சூழ்நிலைகளில் நிகழ்கிறது, உதாரணம், மின்வேதியியலின் முக்கிய அம்சமான மின்கலன்களில் மறைமுகமாக எலக்ட்ரான் பரிமாற்றம் நிகழ்கிறது.
ஒரு வினைபடுபொருளில் ஐதரசன் அணுக்கள் இருந்தால், அது ஈடுபடும் வினையில் புரோட்டான் பரிமாற்றம் நிகழ்கிறது. அமில கார வேதியியலில் இவ்வகை வினைகள் நிகழ்கின்றன. எலக்ட்ரான் இணைகளுடன் பிணையும் வல்லமை பெற்ற வேதியியல் இனங்கள் அனைத்தும் இலூயிக் அமிலங்கள் எனப்படுகின்றன என பொதுவாக வரையறுக்கப்படுகிறது. இதேபோல எலக்ட்ரான் இணையை வழங்கும் வல்லமை பெற்ற எந்தவொரு வேதி இனமும் இலூயிக் காரம் எனவும் பொதுவாக வரையறுக்கப்படுகிறது. அமில கார இடைவினைகளை ஆய்வுசெய்கையில் பியர்சன் அமிலக் காரக் கோட்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முனைவாகுந்திறனும் அயனிகளின் அளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
கனிமச் சேர்மங்கள் இயற்கையில் கனிமங்களாகக் காணப்படுகின்றன. மண்ணில் பைரைட்டு என்ற பெயரில் இரும்பு சல்பைடும் அல்லது கிப்சம் என்ற பெயரில் கால்சியம் சல்பேட்டும் கலந்துள்ளன. மேலும் உயிர்மூலக்கூறுகளில் கனிம சேர்மங்கள் பண்முகத்தன்மையை கொண்டுள்ளன. ஆற்றல் சேமிப்பில் மின்பகுளியாக(சோடியம் குளோரைடு), அல்லது கட்டுமானத்தில் பாலிபாசுபேட்டாக (டிஎன்ஏ வின் முதுகெலும்பாக) இவை செயல்படுகின்றன.
முதல் முக்கியமான மனிதனால் உருவாக்கப்பட்ட முதலாவது முக்கியமான கனிமச் சேர்மம் அமோனியம் நைட்ரேட்டு ஆகும். மண் வளத்தை அதிகரிப்பதற்காக ஏபர் செயல்முறை மூலம் இச்சேர்மம் உருவாக்கப்பட்டது. வனேடியம்(V) ஆக்சைடு, தைட்டானியம்(III) குளோரைடு போன்ற சேர்மங்கள் வினையூக்கியாகப் பயன்படுத்துவதற்காகத் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டன. இலித்தியம் அலுமினியம் ஐதரைடு போன்ற சேர்மங்கள் கரிம வேதியியல் வினைப்பொருளாகப் பயன்படுத்த தொகுக்கப்பட்டன.
கரிம உலோக வேதியியல், கொத்து வேதியியல், உயிர்கனிம வேதியியல் முதலியன கனிம வேதியியலின் துணைப்பிரிவுகளாகும்.புதிய வினையூக்கிகள், மீக்கடத்திகள், சிகிச்சைகள் முதலியனவற்றை நோக்கமாகக் கொண்டு கனிம வேதியியலின் இத்துறைகள் விரிவாக ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.

Monday, 20 November 2017

மூலக்கூற்று வாய்பாடு

மூலக்கூற்று வாய்பாடு அல்லது வேதியியல் வாய்பாடு (chemical formula) என்பது ஒரு சேர்மத்தில் உள்ள அணுக்களின் அளவுகளை விவரிக்கிறது. ஒரு சேர்மத்தின் எடையை கணிப்பதற்கும் அச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்பாடே பயன்படுகிறது. [1]
ஐதரசன் பரவொட்சைட்டின் (ஈரைதரசன் ஈரொட்சைட்டு) மூலக்கூற்று வாய்பாடு H2O2 ஆகும். இந்த வாய்பாடு மூலம் இந்த மூலக்கூற்றில் இரண்டு ஐதரசன் அணுக்களும் இரண்டு ஒட்சிசன் அணுக்களும் உள்ளன என்று தெரிகிறது.
C6H12O6 என்பது குளுக்கோசின் மூலக்கூற்று வாய்பாடு. இந்த வாய்பாடு மூலம் அணுக்களின் எண்ணிக்கை தெரிகிறதே தவிர இந்த அணுக்கள் எந்த வகையில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன என்று அறிய முடிவதில்லை. அத்துடன் பிரற்றோசினதும் குளுக்கோசினதும் மூலக்கூற்று வாய்பாடு ஒன்றேயெனினும் இவற்றின் வேதியியற் கட்டமைப்புகள் வேறுபட்டவை. எனவே, மூலக்கூற்று வாய்பாட்டினால் மூலக்கூறுகளின் வேதியியற் பிணைப்பைச் சரியான வகையில் விளக்க முடியாது. இக்குறையை அமைப்பு வாய்பாடு தீர்த்து வைக்கிறது.

அடைக்கப்பட்ட மூலக்கூறுகளின் வாய்ப்பாடு

வழமையான வாய்ப்பாடு: MC60
"@" வாய்ப்பாடு: M@C60
சில மூலக்கூறுகளும் அணுக்களும் சில வகை மூலக்கூறுகளில் அடைக்கப்பட்டு காணப்படும். அதாவது உள்ளேயுள்ள மூலக்கூறு அல்லது அணுவானது அதனைச் சூழவுள்ள மூலக்கூறுடல் வேதியல் பிணைப்பைப் பேணாமல் வெறுமனே அடைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பக்மின்ஸ்டர்ஃபுலரின் (C60) மூலக்கூற்றில் அடைக்கப்பட்டுள்ள அணுவோடு (M) அம்மூலக்கூறின் வாய்ப்பாட்டை வழமையாக MC60 என்றே எழுதப்படும். எனினும் M உம் C60 உம் வேதியியல் தொடர்பைப் பேணாமை இவ்வாய்ப்பாட்டாற் காட்டப்படவில்லை. @ குறியீடைப் பயன்படுத்துவதால் இவை இரண்டும் வேதியியற் பிணைப்பைப் பேணவில்லை என்பதைக் காண்பிக்கலாம். அதாவது பக்மின்ஸ்டர்ஃபுலரினின் மூலக்கூற்று வாய்பாட்டை M@C60 என எழுத முடியும்.

ஹில் முறை

ஹில் முறை என்பது மூலக்கூற்று வாய்ப்பாட்டை எழுதும் ஒரு முறையாகும். இங்கே முதலில் கார்பன் குறியீடும் பின்னர் ஐதரசன் குறியீடும் அதன் பின்னர் ஆங்கில நெடுங்கணக்கு வரிசையில் அணுக்களின் குறியீடுகள் எழுதப்படும். மூலக்கூறில் கார்பன் அணு இல்லாவிட்டால் நெடுங்கணக்கு வரிசையின் படி மூலக்கூற்று வாய்ப்பாடு எழுதப்படும். இம்முறையானது மூலக்கூற்று வாய்ப்பாட்டில் எளிதாக அணு எண்ணிக்கைகளைத் தேடியறிய உதவும்.

Sunday, 19 November 2017

சர் ஹம்பிரி டேவி

                        ,
 
  சர் ஹம்பிரி டேவி (Sir Humphry Davy: 17 டிசம்பர், 1778 – 29 மே, 1829)

டேவி 

இங்கிலாந்தில் இயற்கை எழில் கொஞ்சும் பென்சான்ஸ் நகரில் 1778ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் டேவி. தந்தை ஒரு மரச் சிற்பி. 16 வயதில் தந்தையை இழந்த டேவி, பசியினாலும் வறுமையினாலும் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வேலை தேடினார். ஒரு மருத்துவரின் உதவியாளரானார். மருத்துவரிடம் தனக்கென்று தனி அறை ஒன்றினைக் கொடுக்கச் சொல்லி ரசாயன சோதனைகளைச் செய்து பார்த்தார்.
புகழ்பெற்ற ராயல் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் கழகப் பணி கேட்டு, தமது 22ஆம் வயதில் கடிதம் எழுதினார். அப்போது அங்கிருந்த லார்டு ராம்போர்டு என்பவர் உடனடியாக வரச்சொன்னார். டேவியை நேரில் பார்த்ததும், உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது; வயதிலும் மிகவும் சிறியவனாக இருக்கிறாய் என்றார் லார்டு ராம்போர்டு.
தயவுசெய்து என் சொற்பொழிவினைக் கேட்டுவிட்டு, பின்பு வேலை கொடுங்கள் என்று கெஞ்சினார். சரி என்று அனுமதி கொடுத்தார் லார்டு ராம்போர்டு. டேவியின் பேச்சினைக் கேட்டுவிட்டுப் புகழ்ந்தார். ரசாயனப் பேராசிரியராக வேலையில் சேர்த்துக் கொண்டார். தனது அறிவுத் திறமையாலும், பேச்சாற்றலாலும் அறிவியல் கருத்துகளை விதைத்தார் டேவி.
கண்டுபிடிப்புகள்
Davy_lamp
  • பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுரங்ககங்களில் மீதேன் (methane) வாயு தீப்பிடித்து, அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாவது என்பது, மிகச் சாதாரணமாக நடந்து வந்த நிகழ்ச்சி. வெளிச்சத்திற்காகத் தீ விளக்குகளைப் பயன்படுத்தியதாலேயே இவ்விபத்துக்கள் சுரங்கங்களில் நடந்து வந்தன; இவ்விபத்துக்களால் பல சுரங்கத் தொழிலாளர்கள் உயிரழக்கவும் நேர்ந்தது. 1815ஆம் ஆண்டு சர் ஹம்ப்ரி டேவி பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்த பின்னர் மேற் கூறிய விபத்துக்கள் பெருமளவுக்குக் குறைந்து விட்டன என்பது மிகப் பெரிய உண்மை.இங்கிலாந்தின் மிகச் சிறந்த வேதியியல் நிபுணர்களுள் ஒருவராக விளங்கிய டேவி பாதுகாப்பு விளக்கை வடிவமைப்பதற்கு இரு காரணங்களை அடிப்படையானவையாகக் கருதினார். ஒன்று, விளக்கு எரியத் தேவையான உயிர்வளி (oxygen) அதாவது ஆக்சிஜன் அடுத்து விளக்குச் சுடரின் வெப்பப் பரவல். உயிர் வளி விளக்குச் சுடர் எரிவதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது; ஆனால் சுடரிலிருந்து வெளியாகும் வெப்பம் அதனைச் சுற்றியுள்ள தீப்பிடிக்கக்கூடிய வாயுக்களை உடனடியாக எரியூட்டச் செய்து விடும். இதனாலேயே தீ விபத்துக்கள் உண்டாயின. எனவே தமது நுண்ணறிவைப் பயன்படுத்திய டேவி, எண்ணெய் விளக்கின் தீச்சுடரைச் சுற்றி மெல்லிய கம்பி வலையால் தடுப்புச் சுவர் ஒன்றை உருவாக்கினார். இதன் விளைவாக சுடர் எரியத் தேவையான காற்று இடரேதுமின்றிக் கிடைத்தது; அதே வேளையில் சுடரிலிருந்து வரும் வெப்பம் வெளியிலுள்ள வாயுக்களை அடைவதற்குள் வீரியம் குறைந்து, சிதறிப் போயின; இதனால் வெளியேயுள்ள வாயுக்கள் எரிவது தவிர்க்கப்பட்டது. வலைச் சுவரால் விளக்குச் சுடரின் ஒளி சற்று மங்கியிருப்பினும், தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் பார்ப்பதற்குப் போதுமானதாயிருந்தது. தற்போது மின் விளக்குகள் சுரங்கத்தினுள் ஒளி வழங்கப் பயன்படுத்தப்பட்டாலும், டேவி கண்டுபிடித்த பாதுகாப்பு விளக்குகள் முழுமையாக அற்றுப்போய்விடவில்லை. சுரங்கத்தினுள் இருக்கக்கூடிய அபாயமான வாயுக்களைக் கண்டறிவதற்கு இப்பாதுகாப்பு விளக்குகள் இப்போதும் பயன்பட்டு வருகின்றன.
  • அறுவை சிகிச்சையின்போது வலியினால் நோயாளிகள் அவதியுறுவதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கினார். நைட்ரஸ் ஆக்சை டின் மயக்க விளைவைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். துணிச்ச லுடன் அந்த வாயுவை தானே நுகர்ந்து பார்த்தார். மயக்கமடைந்தார். தொடர்ந்து பரிசோதித்து இதன் தன்மைகளை விளக்கிக் காட்டினார். லாஃபிங் கேஸ் எனப்படும் இந்த வாயுவைக் கண்டறிந்த டேவியின் புகழ் உலகெங்கும் பரவியது.
  • 1756-ல் பிரிஸ்டலில் ஃபெனுமாடிக் அமைப்பில் இணைந்த டேவி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒரே வருடத்துக்குள் நைட்ரஸ் ஆக்சைடு குறித்த புகழ்பெற்ற கட்டுரைகளை வெளியிட்டார். இந்த இரண்டு ஆய்வுக் கட்டுரைகளும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 1801-ல் ராயல் இன்ட்டிட்யூட்டில் உரையாற்றினார்.

  • தோல் பதனிடல், வோல்டா மின்கலம் ஆகியவை குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். வேதியியல் கூட்டுப் பொருள்களை மின்னாற் பகுப்பு மூலம் எவ்வாறு பிரிப்பது என்பதை இவர் விளக்கினார். சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றைப் பிரித்துக் காட்டினார்.
  • இந்த அடிப்படையில்,ஆல்கலைஸ்கள் உலோக ஆக்சைடுகளே என்பதை செயல்முறை விளக்கத்துடன் எடுத்துக் கூறினார். வாயுக்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அவை தொடர்பான ஏராளமான ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தன. குளோரின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் ஆகிய பல்வேறு தனிமங்களையும் கண்டறிந்தார்.
  • 1813இல் ஃபாரடே என்னும் அறிவியல் அறிஞர் டேவியின் உதவியாளராகச் சேர்ந்தார். இருவரும் அறிவியல் ஆய்வுக்காக ஐரோப்பியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அயோடின் பற்றி ஆய்வு செய்தனர். வைரம் என்பது ஒரு கரிமப் படிவம் என்று நிரூபித்தனர். ஃபாரடேயின் துணையுடன் ‘வேதியியல் தத்துவத் தனிமங்கள் (Elements of Chemical Philosophy) ‘ என்ற தலைப்பில் டேவி ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மேலும் உப்பு நீரில் செம்பு துருப் பிடிப்பதைப் பற்றியும், எரிமலைச் செயல் பாடுகள் பற்றியும் பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டார்.
  • ரசாயன ஆராய்ச்சிக்கு மின்சாரம் சிறந்த பயன்பாடாக உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியதால், ‘மின்சார ரசாயனத்தின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். ஐயோடின் பற்றி ஆய்வு செய்தார். வைரம் ஒரு கரிமப் படிவம் என்பதை நிரூபித்தார்.
  • சிதைந்த வேதியல் கூட்டுப் பொருட்களின் மீது எலக்ட்ராலிசிஸ் முறையில் செயல்பட்டு அதிலிருந்து பொட்டாசியம், சோடியம், பேரியம், கால்சியம், மக்னீஷியம் ஆகிய மூலப் பொருட்களைப் பிரித்தெடுத்தார்.
பெற்ற விருதுகள் 
1812-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.
புத்தகங்கள்
தனது ஆராய்ச்சி கள், கண்டுபிடிப்புகள் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் அவற்றில் சில
  1. — (1800). Researches, Chemical and Philosophical; Chiefly Concerning Nitrous Oxide, or Dephlogisticated Nitrous Air, and Its Respiration. Bristol: Biggs and Cottle. Archivedfrom the original on 12 May 2006.
  2. — (1812). Elements of Chemical Philosophy. London: Johnson and Co. ISBN 0-217-88947-6.
  3. — (1813). Elements of Agricultural Chemistry in a Course of Lectures. London: Longman.
  4. — (1816). The Papers of Sir H. Davy. Newcastle: Emerson Charnley. (on Davy’s safety lamp)
  5. — (1827). Discourses to the Royal Society. London: John Murray.
  6. — (1828). Salmonia or Days of Fly Fishing. London: John Murray.
  7. — (1830). Consolations in Travel or The Last Days of a Philosopher. London: John Murray.
ராயல் சொசைட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், ஏழு வருடங்கள் தொடர்ந்து இந்தப் பதவியில் பணியாற்றினார்.
மனித குலத்துக்கும் மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய சர் ஹப்ம்ரி டேவி 1929-ம் ஆண்டு, 50-வது வயதில் மறைந்தார்.
வேதியியலின் வரலாறு (History of chemistry) என்பது பண்டைய வரலாற்றில் தொடங்கி நிகழ்காலம் வரையிலான காலப்பகுதியைப் பிரதிபலிக்கிறது. கி.பி 1000 ஆண்டுகளில் வாழ்ந்த குடிமக்கள் பயன்படுத்திய பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் முடிவில் வேதியியலின் பலவகைப் பிரிவுகளாக உருவாகியுள்ளன. தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் மெருகூட்டுதல், மதுவகைகளை நொதிக்கச் செய்தல், மருந்துக்காகவும் நறுமணத்திற்காகவும் தாவரங்களிலிருந்து வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்தல், கொழுப்பை சோப்பாக மாற்றுதல் மற்றும் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் செய்தல் போன்ற செயல்களை உதாரணமாகக் கூறலாம்.
வேதியியலின் முற்காலக் கொள்கையான இரசவாதம் என்ற கொள்கை பருப்பொருளின் இயற்கையையும் அதன் மாற்றங்களையும் விளக்குவதில் வெற்றி பெறவில்லை. எனினும் அவர்கள் மேற்கொண்ட சோதனைகள் மற்றும் பதிவு செய்த அச்சோதனைகளின் முடிவுகள் முதலியனவற்றிலிருந்து இரசவாதிகள் நவீன வேதியியலுக்கான புதிய தளம் அமைத்தனர். இரசவாதம் மற்றும் வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை 1661 ஆம் ஆண்டு இராபர்ட் பாயில் தன்னுடைய நூலில் தெளிவுபடுத்தினார். அதன்பின்னர் இவ்விரண்டிற்கும் இடையேயான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கின.
ஆற்றல் அழிவின்மை விதியை வெளியிட்ட அண்டோயின் இலவாய்சியரின் சோதனைகளுக்குப் பின்னர் வேதியியல் என்பது கவனமான அளவீடுகள் மற்றும் வேதியியல் நிகழ்வுகளின் அடிப்படையிலான அளவீடுகள் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஒரு அறிவியல் பிரிவு என்ற நோக்கத்துடன் பயணித்தது. வேதியியலின் வரலாறு வெப்ப இயங்கியலின் வரலாற்றுடன், குறிப்பாக விலார்டு கிப்சின் ஆய்வுகளுடன் பிணைந்தே காணப்படுகிறது[1].

பொருளடக்கம்

பண்டைய வரலாறு

தொடக்கக்கால உலோகவியல்

ஆரம்ப காலத்தில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகமாக பதிவு செய்யப்பட்டிருப்பது தங்கம் எனத் தெரிகிறது. அப்போது இத்தங்கத்தை இயற்கையில் தனித்து காணமுடிந்துள்ளது. பழைய கற்காலமான கி.மு 40000 ஆண்டுகளில் எசுப்பானிய குகைகளில் சிறிதளவு இயற்கைத் தங்கம் காணப்பட்டுள்ளது.[2]
வெள்ளி, செப்பு, வெள்ளீயம் மற்றும் விண்கல் இரும்பு முதலிய உலோகங்களும் இயற்கையில் கிடைத்துள்ளன. இவ்வுலோகங்களைக் கொண்டு சிறிய அளவில் உலோக வேலைப்பாடுகள் நடைபெற்றுள்ளன.[3] கி.மு 3000 ஆண்டுகளில் விண்கல் இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட எகிப்திய ஆயுதங்கள் "வானத்திலிருந்து வந்த குத்துவாள்கள்" எனப் போற்றப்பட்டன.[4]
ஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால், கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினை தீ என்று கூறலாம். எனினும், பல நூற்றாண்டுகளுக்கும் தீ வெறுமனே ஒரு மாயச் சக்தி என்றே பார்க்கப்பட்டது. ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றும் ஒரு மாயச் சக்தி (எரியும் மரம் அல்லது கொதிக்கும் நீர்) வெப்பம் மற்றும் ஒளியை உற்பத்தி செய்வதாகக் கருதப்பட்டது. பண்டைய சமூகத்தை பல வகையிலும் தீ பாதித்துள்ளது. அன்றாட வாழ்வின் சமையல் மற்றும் வாழ்விடத்தை ஒளியூட்டுதல் போன்ற எளிய அம்சங்கள் தொடங்கி செங்கல், மண்பாண்டம் மற்றும் கருவிகள் செய்வதற்காக உலோகங்களை உருக்குதல் போன்ற முன்னேறிய தொழில்நுட்ப அம்சங்கள் வரை இவ்வீச்சு இருந்தது.
ஆரம்ப கட்டங்களின் போது கண்ணாடி கண்டுபிடிப்பு மற்றும் உலோகங்களைத் தூய்மைப் படுத்துதல் போன்றவை படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கலாம்.எகிப்தியர்கள் உலோகங்களைத் தூய்மைப்படுத்தத் தொடங்கிய கி.மு.2900 ஆம் ஆண்டுகளிலேயே தங்கம் ஒரு விலைமதிப்பு மிக்க உலோகமாக மாறியது.

வெண்கலக் காலம்

சில உலோகங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதற்கு எளிமையாக சூடுபடுத்தினாலேயே பெறமுடியும். உதாரணம் ஈயம் மற்றும் வெள்ளீயம். உயர் வெப்பநிலையில் உருக்கிப் பிரித்தல் என்னும் முறையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. இப்பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கி.மு 5 மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. செர்பியாவில் உள்ள மச்தான்பெக், யார்மோவாக் மற்றும் பிலோக்னிக் ஆகிய மூன்று தொல்லியல் தளங்களில் இவ்வாதாரங்கள் கிடைக்கின்றன. இன்றைய தினத்திற்கு உருக்கிப் பிரித்தெடுத்தல் முறையில் தாமிரம் பிரித்தெடுத்ததற்கான ஆதாரம் பெலோவாடு தொல்லியல் தளத்தில் கிடைத்துள்ளது.[5] வின்கா நாகரீகத்தைச் சார்ந்த கி.மு 5500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்புக் கோடரியும் இவ்வாதாரத்தில் அடங்கும்[6]. ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலோகங்களின் பிற அடையாளங்கள் போர்த்துக்கல்லில் உள்ள பால்மெலா. எசுப்பானியாவில் உள்ள லாசு மில்லேரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சுடோன்யெங்கு ஆகிய இடங்களில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிடைக்கின்றன. எனினும், வரலாற்றுக்கு முந்தைய காலங்கள் தொடர்பான ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுவதால் தொடக்கம் தொடர்பான இறுதி முடிவை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மென்மேலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
பண்டைய மத்தியக் கிழக்கில் சுரங்கம் காணப்பட்டப் பகுதிகள். வண்ணப் பெட்டிகள்: ஆர்சனிக் – பழுப்பு, தாமிரம்- சிவப்பு, வெள்ளீயம் – சாம்பல், இரும்பு – செம்பழுப்பு, தங்கம்- மஞ்சள், வெள்ளி- வெண்மை, ஈயம்- கருப்பு. மஞ்சள் பகுதி ஆர்சனிக் வெண்கலத்தைக் குறிக்கிறது. அதேபோல சாம்பல் பகுதி வெள்ளீய வெண்கலத்தைக் குறிக்கிறது
தொடக்கக் கால உலோகங்கள் தனித்தனியான உலோகங்களாகவே அறியப்பட்டன அல்லது கிடைத்தன. செப்பு மற்றும் வெள்ளீயம் உலோகங்களை இணைப்பதன் மூலம் வெண்கலம் என்ற ஒரு உயர்ந்த உலோகம் செய்ய முடியும் என்பதை பின்னர் அறிந்தனர். வெண்கலம் என்று உலோகக் கலவை, கி.மு 3500 காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டதால் அக்க்காலம் வெண்கல வயது தொடங்கிய ஒரு பெரிய தொழில்நுட்ப மாற்றக் காலமாக அறியப்படுகிறது. வெண்கல வயதுக் காலம் மனித கலாச்சார வளர்ச்சியின் காலமாக இருந்துள்ளது. இக்காலத்தில் மிகவும் முன்னேறிய அளவில் உலோக வேலைகள் முறையாகவும் பரவலான பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது. இயற்கையாகவே தோன்றிய தாமிரத் தாதுக்களில் இருந்து செப்பையும் வெள்ளீயத்தையும் வெட்டி எடுத்தல் பின்னர் அவற்றை உருக்கி வெண்கலம் உருவாக்குதல் போன்ற தொழில்நுட்பங்களை வெண்கல வயதுக்காலம் உள்ளடக்கியிருந்துள்ளது. இயற்கையாகத் தோன்றும் தாதுக்களில் ஆர்சனிக் ஒரு பொதுவான மாசாக காணப்பட்டது. கி.மு 3000 ஆண்டுகளில் தாமிரம், வெள்ளீயம் தாதுக்கள் மேற்கு ஆசியாவில் அரிதாக காணப்பட்டுள்ளன. பண்டைய இந்தியாவிலும் உலோகவியல் மற்றும் இரசவாத துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்துள்ளது.[7]

இரும்புக் காலம்

செப்பு அல்லது வெள்ளீயத்தை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதைவிட இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தும் உலோகமாக மாற்றுவது மிகக் கடினமான செயல்முறையாகும். கி.மு 1200 வது ஆண்டில் இட்டிடெசு எனப்படும் பண்டைய அனடோலிய மக்களால் இத்தொழில்நுட்பம் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இக்காலமே இரும்புக் காலத்தின் தொடக்கக் காலமாகும். பிளீசுடைன் மக்களின் வெற்றியில் இரும்பைப் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்தல் தொழில்நுட்பம் முக்கியப்பங்கு வகித்துள்ளது.[4][8]
மற்றபடி இரும்புக் காலம் என்பது பெரசு அல்லது இரும்பு உலோகவியலின் கண்டுபிடிப்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இரும்பு உலோகவியலின் வளர்ச்சி வரலாற்றை கடந்தகால கலாச்சார மற்றும் நாகரீகங்களின் பல்வேறு கட்டங்களில் காணமுடிகிறது. மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்திற்கு அருகில்காணப்பட்ட பண்டைய மற்றும் இடைக்கால பேரரசுகள் மற்றும் அரசுகளிலும், பண்டைய ஈரான், பண்டைய எகிப்து, பண்டைய நுபியா மற்றும் அனடோலியா (துருக்கி), பண்டைய நாக், கார்தேச், கிரேக்கர்கள் மற்றும் பண்டைய ஐரோப்பாவின் ரோமானியர்கள், இடைக்கால ஐரோப்பாவினர், பண்டைய மற்றும் இடைக்கால சீனா, பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா, பண்டைய மற்றும் இடைக்கால சப்பான், பகுதிகளில் இவ்வளர்ச்சியைக் காணமுடிகிறது.இரும்பு தொடர்புடைய அல்லது உலோகவியல் தொடர்பு சாதனங்களின் பல பயன்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பண்டைய சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊது உலை கண்டுபிடிப்பு, வார்ப்பிரும்பு, நீர்ம இயங்கியல் சுத்தியல், மற்றும் இரட்டை இயக்க துருத்திகள் போன்ற கருவிகள் பண்டைய சீனாவில் நிறுவப்பட்டுள்ளன.[9][10]

பாரம்பரிய பழமையும் அணுவியலும்

டெமோகிரிட்டசு, கிரேக்க தத்துவ அறிஞர்.
பண்டைய எகிப்தியர்கள் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை வேதியியலின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். கிமு 1000 ஆண்டளவிலேயே பண்டைய நாகரிக மக்கள் வேதியியலின் பல்வேறு துணைப் பிரிவுகளுக்கு அடிப்படையாக அமையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றுள் கனிம மூலங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தல், மட்பாண்டங்களை வனைந்து மெருகிடல், நொதிக்கவைத்துக் மதுவகைகள் தயாரித்தல், ஆடைகளுக்கும், நிறந்தீட்டலுக்கும் வேண்டிய வண்ணங்களைத் தயாரித்தல், மருந்துகளையும் வாசனைப் பொருட்களையும் செய்வதற்கு தாவரங்களில் இருந்து வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், பாற்கட்டிகளைச் செய்தல், ஆடைகளுக்கு நிறமூட்டல், தோலைப் பதப்படுத்துதல், கொழுப்பிலிருந்து சவர்க்காரம் உற்பத்திசெய்தல், கண்ணாடி உற்பத்தி, வெண்கலம் போன்ற கலப்புலோகங்களை உருவாக்குதல் போன்றவை அடங்கும்.
எப்பிகியூரசு (கிமு 341–270), டெமோகிறிடசின் அணுவியக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்.
வேதியியல், தாதுப் பொருட்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்கு வழி சமைத்த எரிதல் என்னும் தோற்றப்பாட்டில் இருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம். அடிப்படையான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பொன்னின் மீதிருந்த பேராசை அதனை தூய்மையாக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவியது. இது தூய்மையாக்குதல் என்றில்லாமல் ஒரு மாற்றம் என்றே அக்காலத்தில் எண்ணியிருந்தனர். அக்காலத்து அறிஞர்கள் பலர் மலிவான உலோகங்களைப் பொன்னாக மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என நம்பினர். இது இரசவாதம் தோன்றுவதற்கு அடிப்படை ஆகியதுடன், மூல உலோகங்களைத் தொட்டதும் பொன்னாக மாற்றக்கூடிய "இரசவாதக்கல்"லைத் தேடும் முயற்சிகளுக்கும் வித்திட்டது.

Friday, 17 November 2017

வேதியியலுக்கான நோபல் பரிசு

1901 ஜாகபஸ் எச் வாண்ட் ஹாஃப்
நெதர்லாந்து இரசாயன இயக்கவியல் மற்றும் தீர்வுகள் சவ்வூடுபரவற்குரிய அழுத்தம் சட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது
1902 எமில் ஹெர்மன் பிஷ்ஷர்
சர்க்கரை மற்றும் பியூரின் குழுக்கள் ஜெர்மனி செயற்கை ஆய்வுகள்
1903 ஸ்வண்டே ஹர்ஹெனியஸ்
மின் விலகல் ஸ்வீடன் தியரி
1904 சர் வில்லியம் ராம்சே
கிரேட் பிரிட்டன் மந்த வாயுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது
1905 அடால்ஃப் வான் Baeyer
ஜெர்மனி கரிம சாயங்கள் மற்றும் hydroaromatic கலவைகள்
1906 ஹென்றி மோய்சன்
பிரான்ஸ் பயின்றார், உறுப்பு புளோரின் தனிமைப்படுத்தப்பட்டு
1907 எட்வார்ட் Buchner
ஜெர்மனி உயிர்வேதியியல் ஆய்வுகள், செல்கள் இல்லாமல் நொதித்தல் கண்டுபிடிக்கப்பட்டது
1908 சர் எர்னஸ்ட் ரூதர்போர்ட்
உறுப்புகள் கிரேட் பிரிட்டன் சிதைவு, கதிரியக்க பொருட்கள்.
1909 வில்ஹெல்ம் Ostwald
ஜெர்மனி கேட்டலிசிஸ் இரசாயன சமநிலையானது, மற்றும் எதிர்விளைவு விகிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது
1910 ஓட்டோ வால்லாச்
ஜெர்மனி கொழுப்புவட்டமான கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டது
1911 மேரி கியூரி
போலந்து-பிரான்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட ரேடியம், பொலோனியம்.
1913 ஆல்ஃபிரட் வெர்னர்
மூலக்கூறுகள் உள்ள அணுக்களின் சுவிச்சர்லாந்து பிணைப்பு உறவுகள் கண்டுபிடிக்கப்பட்டது.(கனிம வேதியியல்)
1914 தியோடர் டபிள்யூ ரிச்சர்ட்ஸ்
அமெரிக்கா அணு எடை தீர்மானிக்கப்படுகிறது
1915 ரிச்சர்ட் எம் தருவித்தது
ஜெர்மனி விசாரணை ஆலை நிறமி, குறிப்பாக பச்சையம்
1920 வால்த்தெர் எச் Nernst
வெப்பவியக்கவியலின் ஜெர்மனி ஆய்வுகள்
1921 பிரடெரிக் Soddy
சமதாணிகளுக்கான கதிரியக்க பொருட்களை, நிகழ்வு மற்றும் இயற்கை .
1922 பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன்
கிரேட் பிரிட்டன் பல ஓரிடத்தான்கள் கண்டுபிடிக்கப்பட்டது, பொருண்மை நிரல் வரைவி கண்டுபிடிக்கப்பட்டது.
1923 ஃபிரிட்ஸ் Pregl
கரிம சேர்மங்கள் ஆஸ்திரியா சிறு பொருள்களைக் கூறுபடுத்தி ஆய்தல்.
1925 ரிச்சர்ட் Zsigmondy
ஜெர்மனி, ஆஸ்திரியா கூழ்ம வேதியியல் (ultramicroscope)
1926 தியோடர் Svedberg
ஸ்வீடன் கலைக்க அமைப்புகள் (ultracentrifuge)
1927 ஹென்ரிக் Wieland,
பித்த அமிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது
1928 அடால்ஃப் ஒட்டோ ரீன்ஹோல்ட் Windaus
ஸ்டெரால்களில் ஜெர்மனி ஆய்வு மற்றும் வைட்டமின்கள் அவற்றின் உறவு (வைட்டமின் டி).
1929 சர் ஆர்தர் ஹென்டர்சன்
ஹான்ஸ் வான் ஆய்லர்-Chelpin
இங்கிலாந்து
ஸ்வீடன், ஜெர்மனி சர்க்கரைகள் மற்றும் என்சைம்கள் நொதித்தல் .
1930 ஹான்ஸ் பிஷ்ஷர்
 செயற்கையாக ஏமின்கண்டுபிடிக்கப்பட்டது.
1931 பிரெடெரிக் Bergius
கார்ல் போஷ்
ஜெர்மனி அபிவிருத்தி இரசாயன உயர் அழுத்த செயல்முறைகள்.
1932 இர்விங் Langmuir
1934 ஹரோல்ட் கிளேட்டன் Urey
கன ஹைட்ரஜன் ஐக்கிய அமெரிக்கா டிஸ்கவரி .(தூத்தேரியம்)
1935 ஃபிரடெரிக் Joliot-கியூரி
ஐரீன் Joliot-கியூரி
புதிய கதிரியக்க தனிமங்களை பிரான்ஸ் கூட்டிணைப்பு (செயற்கை கதிரியக்கம்)
1936 பீட்டர் ஜே டபிள்யூ டெபை
இருமுனைத் தருணங்களை மற்றும் வாயுக்கள் X கதிர்கள் மற்றும் எலக்ட்ரான் விட்டங்களின் விளிம்பு
1937 வால்டர் என் ஹேவோர்த்
பால் Karrer
கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் சி
ஆய்வு கரோட்டினாய்டுகள் மற்றும் flavins மற்றும் வைட்டமின்கள் A, B2
1939 அடால்ப் எஃப்.ஜே. Butenandt
Lavoslav Stjepan Ružička
பாலியல் ஹார்மோன்கள் மீது சுவிச்சர்லாந்து ஆய்வுகள்
ஆய்வு polymethylenes மற்றும் உயர் டெர்ப்பென்ஸ்
1943 ஜோர்ஜ் டி Hevesy
ரசாயன செயல்முறைகள் விசாரணை அறிகுறிகளாக சமதாணிகளுக்கான 
கண்டுபிடிப்புகள்.

1944 ஓட்டோ ஹான்
ஜெர்மனி அணுக்களின் அணு பிளப்பு கண்டுபிடிக்கப்பட்டது
1945 Artturi Ilmari Virtanen
விவசாய மற்றும் உணவு வேதியியல் பகுதியில் பின்லாந்து கண்டுபிடிப்புகள், தீவனம் பாதுகாப்பதற்கான முறை.
1946 ஜேம்ஸ் பி சம்னர்
ஜான் எச் நார்த்ராப்
வெல்டன் எம் ஸ்டான்லி
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தூய வடிவில் என்சைம்கள் மற்றும் வைரஸ் புரதங்கள்
என்சைம்கள் Crystallizability
1947 சர் ராபர்ட் ராபின்சன்
1948 ஆர்ன் டபிள்யூ கே Tiselius
மின் மற்றும் பரப்புக் கவர்ச்சி, சீரம் புரதங்கள் குறித்து கண்டுபிடிப்புகள் பயன்படுத்தி ஸ்வீடன் பகுப்பாய்வு
1949 வில்லியம் எஃப் Giauque
இரசாயன வெப்ப இயக்கவியலுக்கு அமெரிக்கா பங்களிப்பு, மிகவும் குறைந்த வெப்பநிலையில் பண்புகள் (வெப்பமாற்றமில்லா காந்த நீக்கம்)
1950 கர்ட் ஆல்டர்
ஓட்டோ பி எச் டையீல்-
ஜெர்மனி அபிவிருத்தி தையீன்றொகுப்பு.
1951 எட்வின் எம் மெக்மில்லனுடன்
கிளென் டி Seaborg
transuranium கூறுகள் வேதியியலில் அமெரிக்கா கண்டுபிடிப்புகள்
1953 ஹெர்மன் Staudinger
மூலக்கூறு வேதியியல் பகுதியில் ஜெர்மனி கண்டுபிடிப்புகள்
1954 லினஸ் சி பாலிங்
புரதங்கள் மூலக்கூறு அமைப்பு கண்டுபிடிப்புகள்
1955 வின்சென்ட் டு Vigneaud
அமெரிக்கா ஒரு polypeptide ஹார்மோன் கண்டுபிடிப்புகள்.
1956 சர் சிறில் நார்மன் Hinshelwood
நிகோலாய் என் Semenov
வேதி வினைகளின் சோவியத் யூனியன் வழிமுறைகள்
1957 சர் அலெக்சாண்டர் ஆர் டாட்
கிரேட் பிரிட்டன் ஆய்வு ந்யூக்லியோடைட்களையும் தங்கள் கோஎன்சைம்களின்
1958 பிரடெரிக் சாங்கர்
புரதங்களின் கிரேட் பிரிட்டன் அமைப்பு, குறிப்பாக இன்சுலின்
1959 ஜரோஸ்லாவ் Heyrovský
செக் குடியரசு Polarography
1960 வில்லார்ட் எஃப் லிப்பி
வயது தீர்மானங்கள் கார்பன் 14 ஐக்கிய அமெரிக்கா விண்ணப்பம் (ரேடியோகார்பனின் டேட்டிங்)
1961 மெல்வின் கால்வின்
அமெரிக்காவில் தாவரங்கள் மூலம் கார்பானிக் அமிலம் ஜீரணம் படித்தார் (ஒளிச்சேர்க்கை)
1963 கிலியோ Natta
கார்ல் சீக்லர்
 வேதியியல் மற்றும் உயர் பாலிமர்களைக் தொழில்நுட்பம்
1964 டோரதி மேரி க்ரோஃபூட் ஹோட்ஜ்கின்
எக்ஸ் கதிர்கள் மூலம் உயிரியல் ரீதியாக முக்கிய பொருட்களின் கிரேட் பிரிட்டன் வடிவமைப்பு தீர்மானத்தின்
1965 ராபர்ட் பி வுட்வார்ட்
இயற்கை பொருட்கள் அமெரிக்கா கூட்டிணைப்பு
1966 ராபர்ட் எஸ் Mulliken
அமெரிக்கா சுற்றுப்பாதை முறையை பயன்படுத்தி இரசாயன பிணைப்புகள் மற்றும் மூலக்கூறுகள் எலக்ட்ரான் அமைப்பு கண்டுபிடிப்புகள்.
1967 மன்ஃபிரட் ஐகன்
ரொனால்ட் ஜி டபிள்யூ Norrish
ஜார்ஜ் போர்ட்டர்
 மிகவும் வேகமாக ரசாயன எதிர்வினைகளை விசாரணை கண்டுபிடிப்புகள்.
1970 லூயிஸ் எஃப் Leloir
சர்க்கரை நியூக்ளியோடைட்களும் அர்ஜென்டீனா டிஸ்கவரி மற்றும் கார்போஹைட்ரேட் உயிரியல் கண்டுபிடிப்புகள்
1971 ஹெகார்ட் Herzberg
 இலவச தீவிரவாதிகள் கனடா எலக்ட்ரான் அமைப்பு மற்றும் மூலக்கூறுகள் வடிவியல்  கண்டுபிடிப்பு (மூலக்கூறு நிறமாலைகாட்டியியல்)
1972 கிரிஸ்துவர் பி அன்ஃபின்சன்
ஸ்டான்போர்ட் மூர்
வில்லியம் எச் ஸ்டீன்
ribonuclease செயலில் சென்டர் ஆய்வு (மூர் & ஸ்டீன்)
1973 எர்ன்ஸ்ட் ஓட்டோ பிஷ்ஷர்
ஜெஃப்ரி வில்கின்சன்
உலோக கரிம ரொட்டி கலவைகள் கிரேட் பிரிட்டன் வேதியியல்
1974 பால் ஜே வில்
பெருமூலக்கூறுகள் ஐக்கிய அமெரிக்கா இயற்பியல் வேதியியல்
1975 ஜான் கார்ன்ஃபார்த்
விளாடிமிர் ப்ரேலாக்
யூகோஸ்லாவியா - என்சைம் ஊக்கவினை வினைகளின் சுவிச்சர்லாந்து முப்பரிமாண
கரிம மூலக்கூறுகளை மற்றும் வினைகளின் முப்பரிமாண ஆய்வு
1976 வில்லியம் என் ஆராய்கிறார்
boranes 
செலவுத்தொகுதி கட்டமைப்புகள் கோட்பாடு செய்ய முடியாத செயல்முறைகள் வெப்ப இயக்கவியலுக்கு 1977 இல்யா Prigogine பெல்ஜியம் பங்களிப்புகள்,
1978 பீட்டர் மிட்செல்
கிரேட் பிரிட்டன் ஆய்வு உயிரியல் ஆற்றல் பரிமாற்றம், chemiosmotic கோட்பாடு வளர்ச்சி
1979 ஹெர்பர்ட் சி பிரவுன்
ஜியார்ஜ் விட்டிங்
(கரிம) போரான் மற்றும் பாஸ்பரஸ் கலவைகள் ஜெர்மனி அபிவிருத்தி  கண்டுபிடிப்புகள்.
1980 பால் பெர்க்
வால்டர் கில்பர்ட்
பிரடெரிக் சாங்கர்
கிரேட் பிரிட்டன் நியூக்ளிக் அமிலங்கள் உயிர்வேதியியல், குறிப்பாக கலப்பின டிஎன்ஏ (மரபணு அறுவை சிகிச்சை தொழில்நுட்பம்) (பெர்க்) படித்தார்
நியூக்ளிக் அமிலங்கள் நிர்ணயிக்கப்படுகிறது அடிப்படை தொடர்கள் (கில்பர்ட் மற்றும் சாங்கர்)
1981 Kenichi புக்கி
ரூவால் ஹாஃப்மேன்
ரசாயன எதிர்வினைகளை முன்னேற்றம் குறித்து அமெரிக்கா கோட்பாடுகள் (எல்லை சுற்றுப்பாதை கோட்பாடு)
1982 ஆரன் குலுக்
தென் ஆப்ரிக்கா உயிரியல் ரீதியாக முக்கிய நியூக்ளிக் அமிலம் புரதம் வளாகங்களில் வர்ணனையும் உருவாக்கப்பட்டது, படிகவியல் முறைகள்
1983 ஹென்றி டாபெ
எதிர்வினை குறிப்பாக உலோக வளாகங்களில் எலக்ட்ரான் பரிமாற்ற வழிமுறைகள்,
1984 ராபர்ட் புரூஸ் Merrifield
பெப்டைட்களையும் புரதங்கள் தயாரித்தல் அமெரிக்கா முறை
1985 ஹெர்பர்ட் Hauptman
ஜெரோம் Karle
அமெரிக்கா படிக அமைப்புகளின் உறுதியை நேரடி முறைகளை உருவாக்கிது.
1986 டட்லி ஆர் Herschbach
யுவான் டி லீ
ஜான் சி Polanyi 
இரசாயன தொடக்க செயல்முறைகள் 
1987 டொனால்ட் ஜேம்ஸ் திணி
சார்லஸ் ஜே பித்தர்சன்
ஜோன் மரி Lehn
உயர் தேர்ந்தெடுக்கும் கட்டமைப்புரீதியாக குறிப்பிட்ட தொடர்பு கொண்டு மூலக்கூறுகள் பிரான்ஸ் அபிவிருத்தி.
1988 ஜோஹன் Deisenhofer
ராபர்ட் ஹூபர்
ஹார்முட் மிஷேல்
ஜெர்மனி ஒரு ஃபோட்டோசின்தடிக் எதிர்வினை மையத்தில் முப்பரிமாண அமைப்பில் தீர்மானிக்கப்படுகிறது
1989 தாமஸ் ராபர்ட் Cech
ribonucleic அமில வினையூக்கத் பண்புகள் (ஆர்.என்.) கண்டுபிடிக்கப்பட்டது
1990 எலியாஸ் ஜேம்ஸ் கோரே
அமெரிக்காவில் சிக்கலான இயற்கை கலவைகள் தொகுப்புக்கான அபிவிருத்தி நாவல் முறைகள் (retrosynthetic பகுப்பாய்வு)
1991 ரிச்சர்டு ஆர் எர்ன்ஸ்ட்
உயர் தீர்மானம் அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலை (என்எம்ஆர்)
1993 கேரி பி Mullis
மைக்கேல் ஸ்மித்
பாலிமரேஸ் கனடா இன்வென்ஷன் (பி.சி.ஆர்)
தளத்தில் குறிப்பிட்ட மரபணு மாற்ற அபிவிருத்தி
1994 ஜார்ஜ் Olah  Carbocations கண்டுபிடிக்கப்பட்டது.
1995 பால் கிரூட்சென்
மரியோ மோலினா
எஃப் ஷெர்வுட் ரோலாண்ட்
அமெரிக்காவில் வேலை வளிமண்டல வேதியியல், குறிப்பாக ஓசோன் உருவாக்கம் மற்றும் சிதைவு குறித்து
1996 ஹரோல்ட் டபிள்யூ Kroto
ராபர்ட் எஃப் கர்ல், ஜூனியர்
ரிச்சர்ட் ஸ்மால்லி
 ஃபுல்லெரென்கள் கண்டுபிடிக்கப்பட்டது
1997 பால் டேலோஸ் போயர்
ஜான் வாக்கர்
ஜென்ஸ் சி Skou
அடினோசின் டிரைபாஸ்பேட் தொகுப்புக்கான அடித்தளத்தில் என்சைமாக்கல் பொறிமுறையை தெளிவுபடுத்த (ஏடிபி)
அயனி சரக்குக் நொதி, நா + K + -ATPase முதல் கண்டுபிடிப்பு
1998 வால்டர் Kohn
ஜான் Pople
அடர்த்தி செயல்பாட்டு கோட்பாடு கிரேட் பிரிட்டன் அபிவிருத்தி (Kohn)
குவாண்டம் வேதியியல் (காஸ்ஸியன் கணினி நிரல்கள்) கணக்கீட்டு முறைகள் அபிவிருத்தி (போப்)
1999 அகமது எச் Zewail
 ஃபெமடோசெகண்ட் நிறப்பிரிகை பயன்படுத்தி வேதி வினைகளின் மாற்றம் 
2000 ஆலன் ஜே ஹீகர்
ஆலன் ஜி MacDiarmid
ஹிடேகி ஷிரக்காவா
 பாலிமர்கள் உருவாக்கப்பட்டது
2001 வில்லியம் எஸ் நோல்ஸ்
Ryoji Noyori
கார்ல் பாரி Sharpless
வேலை chirally வினையூக்கப்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் எதிர்வினைகள் (நோல்ஸ் மற்றும் Noyori)
வேலை chirally வினையூக்கப்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனேற்ற எதிர்விளைவுகள் (Sharpless)
2002 ஜான் பென்னெட் ஃபென்
Jokichi Takamine
உத்ரிச் 
வெகுஜன ஸ்பெக்ட்ரோமெட்ரிக் க்கான சுவிச்சர்லாந்து உருவாக்கப்பட்டது மென்மையான புறந்தள்ளுதல் அயனியாக்கும் முறைகள் உயிரியல் பெருமூலக்கூறுகள் பகுப்பாய்வு (ஃபென் & டனாக)
தீர்வு உயிரியல் பெருமூலக்கூறுகள் முப்பரிமாண கட்டமைப்பை தீர்மானிக்கும் உருவாக்கப்பட்டது அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலை (உத்ரிச்)
2003 பீட்டர் AGRE
ரோட்ரிக் MacKinnon
 சவ்வு நீர் போக்குவரத்து தண்ணீர் கால்வாய்கள் கண்டுபிடிக்கப்பட்டது
செல்களில் அயனி வழிகளின் கட்டமைப்பு மற்றும் இயக்கவியல் ஆய்வுகள் நிகழ்த்தப்படுகிறது
2004 ஆரோன் Ciechanover
Avaram Hershko
இர்வின் ரோஸ்
 யுபிக்விட்டின்-இடைநிலை புரோட்டீன் தரமிழப்பு செயல்முறை 
2005 ஈவ் Chauvin
றொபேட் எச் Grubbs
ரிச்சர்டு ஆர் Schrock
அமெரிக்கா 'பச்சை' வேதியியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் அனுமதிக்கிறது, கரிம தொகுப்பு ஒலியிடப்பெயர்வால் முறை உருவாக்கப்பட்டது
"ஈகார்யோட்டிக் படியெடுத்தல் மூலக்கூறு அடிப்படையில் பற்றிய ஆய்வில்
2006 ரோஜர் கோர்ன்பெர்க் 
2007 கெரார்டு எர்ட்டில்
2008 ஷிமோமுரா ஓசாமு
மார்ட்டின் Chalfie
ரோஜர் ஒய் Tsien
"பச்சை ஒளிரும் புரதம் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு, GFP"
2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
தாமஸ் Steitz
அடா Yonath ஐக்கிய ராஜ்யம்
"ரிபோசோம் அமைப்பு மற்றும் செயல்பாடு ஆய்வுகள்" Isreal
2010 -இச்சி நெகிஷி
அகிரா சுசுகி
ரிச்சர்ட் ஹெக் 
 "பலேடியம்-குறுக்கு இணைப்பு வளர்ச்சி
2011 டேனியல் Shechtman
"அரை-படிகங்களின் கண்டுபிடிப்பு 'இஸ்ரவேலின்
"ஜி-புரதத்துடன்-இணைத்த வாங்கிகளை ஆய்வுகள்" 2012 ராபர்ட் Lefkowitz மற்றும் பிரையன் Kobilka அமெரிக்கா
2013 மார்ட்டின் Karplus, மைக்கேல் லெவிட், Arieh Warshel  "சிக்கலான இரசாயன அமைப்புகள் multiscale மாதிரிகள் அபிவிருத்தி"
2014 எரிக் Betzig, ஸ்டீபன் டபிள்யூ ஹெல், வில்லியம் Moerner (அமெரிக்கா)  "சூப்பர்-தீர்க்கப்பட ஒளி நுணுக்குக்காட்டியைப் வளர்ச்சிக்கு"
2015 தாமஸ் லிண்டாஹல், அஜீஸ் Sancar, பால் Modrich ஐக்கிய ராஜ்யம்,  "டிஎன்ஏ பழுது இயக்கவியல் ஆய்வுகள் ஐந்து"

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...