உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்
பூச்சிகளைக் கொல்லப் பயன்படும்வேதிப்பொருட்கள்-பூச்சிக்கொல்லிகள்(டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்,மாலத்தியான் போன்றவை).
பூஞ்சைகளை அழிக்க உதவும் வேதிப்பொருட்கள்பூஞ்சைக்கொல்லிகள்(போர்டாக்ஸ் கலவை)
களைகளை(தேவையற்ற செடிகள்)அழிக்கப்பயன்படும் வேதிப்பொருட்கள்களைக்கொல்லிகள்(2,4-D(2,4-டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்)
எலிகள், சுண்டெலிகள் மற்றும் அணில்களைப் போன்ற கொறிக்கும் விலங்குகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருட்கள்எலிக்கொல்லிகள்(துத்தநாகபாஸ்பேட், ஆர்சனிக்)
மெல்லும் பூச்சிகள்
இவை தாவரங்களின் வேர், தண்டு மற்றும் இலைகளைக் கடித்து மெல்லும் தன்மை
கொண்டவை. எ.கா. வெட்டுக்கிளிகள், கம்பளிப் பூச்சிகள்
உறிஞ்சும் பூச்சிகள்-இலைத்தத்துப் பூச்சிகள்,அசுவனி(தாவரப்பேன்)
துளைக்கும் பூச்சிகள்-கரும்புத் துளைப்பான்.
மண்ணில் பூச்சிக்கொல்லிகளைக்கலப்பதன் மூலம் வேர் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த-குளோரோபைரிபாஸ்.
தண்டு மற்றும் இலைகளைக் கடிக்கும் மற்றும் துளைக்கும் பூச்சிகளை,பூச்சிக்கொல்லிகளைத் தூவுதல் அல்லது தெளித்தல் மூலம் கட்டுப்படுத்தலாம்.(மாலத்தியான், லின்டேன் மற்றும்
தையோடான்.)
சாறு உறிஞ்சும் பூச்சிகளை, பூச்சி கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். (டைமீத்தோயேட் மற்றும் மெட்டாசிஸ்டாக்ஸ்)
பயிர் நோய்கள்
விதைகள் மூலம் பரவும் நோய்கள்-நெல்லின் இலைப்புள்ளி,நோய் கோதுமையின் கரும்புள்ளி நோய்.மண் மூலம் பரவும் நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய்(டிக்கா நோய்) .காற்று மூலம்
பரவும் நோய்கள்-நெல்லின் வெப்பு நோய், கோதுமையின் துரு நோய்.நீர் மூலம் பரவும்
நோய்கள்-நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்.
மாறுபட்ட ஜீனாக்கம் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாவரங்களைக் கலப்பு செய்து, மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்கும் முறை கலப்பினப்பெருக்கம் அல்லது கலப்பினச்சேர்க்கை எனப்படும்.
No comments:
Post a Comment