Thursday 21 September 2017

இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (ஆங்கிலம்: National Food Security Bill - India) என்பது உணவை ஒர் அடிப்படை மனித உரிமையாகஉறுதிசெய்து முன்மொழிந்துள்ள சட்டம் ஆகும். இது ஏழை மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இச் சட்டத்தால் சுமார் 67% அல்லது 80 கோடி ஏழை மக்கள் பலன் அடைவார் என்று இச் சட்டத்துக்கு ஆதரவானோர் கூறுகின்றார்கள்.[1]

சட்டம் ஆக்கம்

இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இந்தியக் காங்கிரசுக் கட்சியின் ஒரு தேர்தல் கொள்கை ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் அடுத்து அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டு காங்கிரசுக் கட்சி இத் திட்டத்தை முன்வைப்பதாகக் கூறுகிறது. இத் திட்டத்தை 2013 சூன் மாத அளவில் சட்ட ஏற்புப் பெறக் காங்கிரசுக் கட்சி முயற்சி செய்கிறது.
இந்திய உணவு பாதுகாப்பு சட்டம் புது டில்லிஅரியானாஇமாச்சலப் பிரதேசம்ராஜஸ்தான்கர்நாடகம்பஞ்சாப்சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை உத்தரப்பிரதேசம்தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம், போன்ற மாநிலங்களிலும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.[2]
இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் ஏற்கனவே தமிழ்நாடுபீகார்சத்தீசுகர் உட்பட்ட பல மாநிலங்களில் உள்ளன.[3]

உணவுச் சிக்கல்

இந்திய மக்களில் பெரும்பான்மையினர் மிகவும் ஏழைகள் ஆவர். இவர்களின் கணிசமானவர்கள் தமது அடிப்படை உணவுத் தேவைகளைப் நிறைவு செய்ய முடியாதவர்களாக உள்ளனர். மேலும் ஊட்டக்குறை ஒரு பெரும் சிக்கலாக உள்ளது. இதனால் பல்வேறு நலக்கேடுகளை இந்த மக்கள் எதிர்நோக்குகின்றார்கள்.[4]

திட்டம்

இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏழை மக்களுக்கு 7 கிலோ அரிசி, கோதுமை, மற்றும் சிறு தானியங்கள் முறையே இ.ரூ 3, இ.ரூ 2, இ.ரூ 1 உக்கு வழங்கப்படும்.[5]

செலவுகள்

இத் திட்டம் நடைமுறையானால் இது சுமார் 1.3 ரில்லியன் இந்திய ரூபாய்கள் (அ.டொ 23.9 பில்லியன்) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[6]

விமர்சனங்கள்

இச் சட்டம் தொடர்பாகப் பல விமர்சனங்கள் பொருளாதார, அரசியல், சமூக நோக்கில் முன்வைத்துள்ளன. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தியாவின் மிகவும் மோசமான கடன் நிலையை மேலும் தீவிரமாக்கும். இத் சட்டத்தில் இதன் செலவுகள் எவ்வாறு கவனிக்கப்படும் என்று எந்த விபரமும் இல்லை.
இச் சட்டத்தினால் உணவுப் பொருட்களின் விலை மலிந்து உழவர்கள் பாதிப்படைவார்கள். இதனை முன்வைத்துப் பல உழவர் மன்றங்கள் இச் சட்டத்தை எதிர்த்துள்ளன.[7] மேலும் இந்தச் சட்டம் பெரும் தானியங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் சிறு தானியங்கள், பழங்கள், மரக்கறிகள், கிழங்குகள், பருப்புகள் போன்ற பல்வகை வேளாண் பண்டங்கள் பாதிப்பு அடையும் என்று சி.ஏ.சி அறிக்கை, நடுவண் வேளாண் அமைச்சர் உட்பட பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.[8][9]
இத் சட்டம் நல்லது என்றாலும் இதை திறமையாக நிறைவேற்றுவது கடினமானது. இந்தியாவில் உணவாக்கத்தை விட விநியோகமே பெரும் பிரச்சினையாக உள்ளது. இச் சட்டம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது. இதன் பலன்கள் ஏழை மக்களைச் சென்றடைவதற்கும், நிறைவேறுவதற்கும் எந்தவிதமான உறுதிப்பாடும் இல்லை. அரசு சிறந்த சந்தை ஊக்குவிப்புக்களைச் செய்ய வேண்டுமே ஒழிய இலவசங்களை வழங்கக் கூடாது என்று சிலர் வலுதுசாரிப் பார்வையில் விமர்சித்துள்ளார்கள்.[10]
இச் சட்டம் மாநிலங்களின் கருத்துகளைப் பெறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் ஏற்கனவே நிறைவேற்றும் இதே போன்ற திட்டங்களுக்கு இவை இடையூறாக அமையலாம் என்று கூறித் தமிழ்நாடு அரசு இச் சட்டத்தை எதிர்க்கிறது.[11] மேலும், இச் சட்டம் அரசியல் இலாபம் கருதி மட்டுமே முன்வைக்கப்படுகிறது என்று எதிர்கட்சிகள் உட்படப் பலர் குற்றம் சாற்றியுள்ளார்கள்.[10]
மேலும் சிலர் இச் சட்டத்தின் செயற்பரப்பு போதாது என்று, இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளனர்

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...