Wednesday 25 October 2017

அணு அமைப்பு – II (Atomic Structure – II)

1. இனக்கலப்பு வரையறு.
 ஏறக்குறைய சமமான ஆற்றல் கொண்ட அணுவின் ஆர்பிட்டால்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து சமமான ஆற்றலுடைய, ஒத்த வடிவமுடைய ஆட்பிட்டால்களை தருவது.
2. துகள் மற்றும் அலை வேறுபடுத்துக.
வ. எண்
துகள்
அலை
1
துகளானது அண்டத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட இடத்தைப் பெற்றுள்ளது.
அலையானது அனைத்து 
இடங்களிலும் 
பரவி காணப்படுகிறது.
அலையானது ஒரு குறிப்பிட்ட இடத்தைப்
பெற்றிருப்பதில்லை.
2
ஒரு துகள் ஒரு குறிப்பிட்ட  இடத்தை ஆக்கிரமித்திருக்கும்  போது மற்றொரு துகள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பதில்லை.
இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட அலைகள் ஒரே
இடத்தை ஆக்கிரமிக்கும்.
3
ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள துகள்களின் எண்ணிக்கையானது அவற்றின் கூடு தலுக்கு சமமாக இருக்கும். அதாவது கூடுதலாகவோ  அல்லது குறைவாகவோ இருக்காது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் 
உள்ள அலைகளின்
எண்ணிக்கையானது
அவற்றின் குறுக்கீட்டுப்
பண்பின்  காரணமாக 
மொத்த எண்ணிக்கையைவிட  கூடுதலாகவோ அல்லது 
குறைவாகவோ இருக்கும்.
 3. பிணைப்புத்தரம் என்றால் என்ன?
பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்களில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும் (Nb) எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்களில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும் (Na) உள்ள வேறுபாட்டில் பதியளவாகும். அதாவது,
 பிணைப்புத்தரம் = ½ (Nb – Na) 
4. ஹைய்சன்பர்க்கின் நிலையில்லா கொள்கையை எழுது.
ஒரே நேரத்தில் மிகவும் துல்லியமாக நுண் துகளின் நிலை மற்றும் திசைவேகம் (அல்லது உந்தம்) ஆகியவற்றை அளவிடமுடியாது.
கணிதவியல் முறைப்படி நிலையில்லா கோட்பாடு
Δx . Δp ≥ h / 4π
இங்கு,
Δx = துகளின் நிலையில் உள்  நிலையில்லாத்தன்மை
Δp = துகளின் உந்தத்தில் உள்ள நிலையில்லாத்தன்மை 
அல்லது
Δx . mΔv ≥ h / 4π
இங்கு,
Δx = துகளின் நிலையில் உள்ள நிலையில்லாத்தன்மை
Δv = துகளின் திசைவேகத்தில் உள்ள நிலையில்லாத்தன்மை
  m = நிறை 
5. ஹைட்ரஜன் உருவாவதற்கான முக்கிய காரணங்கள் யாவை?
1. ஹைட்ரஜன் பிணைந்துள்ள அணு அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலை பெற்றிருக்கும் போது பிணைப்பு முனைவுடன் இருக்கும்.
2. ஹைட்ரஜன் பிணைந்துள்ள அணுவின் உருவளவு சிறியதாக இருக்கும்போது அது பிணைப்பு எலக்ட்ரான் இணையை தன்பால் ஈர்க்கும்.
 அல்லது
ஹைட்ரஜன் பிணைந்துள்ள அணுவின் உருவளவு சிறியதாகவும், அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலையும் பெற்றிருந்தால் ஹைட்ரஜன் உருவாவது சாத்தியமாகும். 
6. எலக்ட்ரான் ஆற்றலின் எதிர்குறியின் முக்கியத்துவம் யாது?
 முடிவிலாத் தொலைவிலுள்ள ஓர் எலக்ட்ரானின் ஆற்றல் தோராயமாக பூஜ்ஜியம் எனக் கொள்வோம். இந்நிலையானது பூஜ்ஜிய ஆற்றல் நிலை எனப்படும். எலக்ட்ரான் நகர்ந்து, அணுக்கருவின் கவர்ச்சிக்கு உட்படும்போது, அது குறிப்பிட்ட வேலையை செய்வதால் ஆற்றலை இழக்கிறது. எனவே, எலக்ட்ரானின் ஆற்றல் குறைந்து கொண்டே வந்து பூஜ்ஜியத்தைவிட குறைவாகிறது. அதாவது,எதிர்குறி மதிப்பைப்பெறுகிறது. 
7. He2 ஏன் உருவாகவில்லை?
1. ஹீலியத்தின் எலக்ட்ரான் அமைப்பு (Z = 2) 1s2
2. ஒவ்வொரு ஹீலியம் அணுவும் இரண்டு எலக்ட்ரான்களை பெற்றிருப்பதால் He2 மூலக்கூறில் 4 எலக்ட்ரான்கள் உள்ளன.
3. He2 மூலக்கூறின் எலக்ட்ரான் அமைப்பு He2: (σ1s)2 (σ *1s)2
4. He2 மூலக்கூறின் ஆர்பிட்டால் வரைபடம்

Nb = 2 மற்றும் Na = 2 எனில் 
 5. பிணைப்புத்தரம் = Nb - Na / 2 = 2 - 2 / 2 = 0
பிணைப்புத்தரம் பூஜ்ஜியமாக இருப்பதால் He2 மூலக்கூறு உருவாகாது

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...