உடல் உள் உறுப்புகளும் நோய்களும்
மானிட உடலமைப்பிலே, மறைந்து கிடக்கும் ரகசியங்களும், அதிசயங்களும் ஆய்வுக்கு அடங்காதவையாகும். மானிட உடலமைப்பினை ஆய்வுசெய்யும் போது அதன் அற்புத அமைப்பானது,அரிய பெரிய உண்மைகளையும் அளப்பெரிய தத்துவங்களையும் புதிது புதிதாக நமக்குக் காட்டி வருகின்றது. நளினமான உடலின் மேன்மைத் தன்மைகள், நமது எண்ணங்களில் இனிமையாய் மீட்டுகின்றன.
Anatomy எனக் கூறப்படும் ஆங்கிலச் சொல்லானது, Anatome என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானதாகும். வாழும் உயிரினங்களின் உடலமைப்பைத் தெரிந்துகொள்ள,பிளந்து ஆய்வு செய்யும் முறை எனும் அர்த்தத்தில் இந்த சொல் உருவாகியுள்ளது.
உடல் அமைப்பு
மனித உடல் பல செல்களால் ஆக்கப்பெற்றது
மனித உடல் பல செல்களால் ஆக்கப்பெற்றது
செல்
உயிரினத்தின் வாழ்க்கைக்கு செல் தான் அடிப்படை அமைப்பாகும். உயிர் வாழும் விலங்குகள், தாவரங்கள் எல்லாமே செல்களால்தான் உண்டாகியிருக்கின்றன.

செல்லின் அமைப்பு
விலங்குகளின் செல்கள் பல வடிவம் கொண்டவை. அவை கோளமாகவோ அல்லது பட்டகம் போலவோ அல்லது நீண்டோ, வால் போன்றோ அமைந்த வடிவமுடன் விளங்குகின்றன.
ஒரு செல்லின் இன்றியமையாத அடிப்படைக் குணங்களாக அமைந்திருப்பவை:
• வளர்கின்ற பண்பு

• உணர்கின்ற திறன்
• இனப்பெருக்கம்
• உணர்ச்சிகளை ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு கடத்துகின்ற பண்பு
• வளர்சிதை மாற்றம்
• இயங்கும் தன்மை
புரதங்கள், கொழுப்புகள், மாப்பொருள்கள், தண்ணீர், உப்புச் சத்துக்கள் என்பவற்றால் ஒரு செல்லானது உருவாக்கப்படுகிறது.
செல்லின் பாகங்கள்
• செல் உறை
செல்லின் பாகங்கள்
• செல் உறை
• உட்கரு
• சைட்டோபிளாசம்
திசுக்கள்
மனித உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும், பலவகைப்பட்ட திசுக்களால் ஆனதாகும். திசுக்கள் என்பவை செல்களின் கூட்டத்தினால் உருவாக்கப்படுகின்றன. ஆகவே ஒவ்வொரு திசுவும், திட்டவட்டமான அமைப்பும் செயல்முறையும் கொண்டதாகவும், ஓர் உயிர்ப்புள்ள மண்டலமாகவும் இயங்குகிறது.

உயிரினத்தின் ஒப்பற்ற அமைப்பான இந்தத் திசுக்கள் ஐந்து வகைகளாகப் பிரிந்து இயங்குகின்றன.
• எபிதீலியத் திசு
• எபிதீலியத் திசு
• இணைப்புத் திசு
• தசைத் திசு
• நரம்புத் திசு
• இரத்தத் திசு
உடற் தொகுதிகள்
எமது உடலில் உள்ள அடிப்படை ஆதாரத்தாயாக விளங்குவது செல்கள்.செல்கள் பலவாகச் சேர்ந்து திசுக்கள் உண்டாகும். திசுக்கள் பலவாகச் சேர்ந்து உறுப்புக்கள் உண்டாகும். ஒரே மாதிரியான பணிகள் கொண்ட உறுப்புக்கள் பல சேர்ந்து உடற் தொகுதிகள் உண்டாகும். இவ்வாறு எம் உடலில் பல தொகுதிகள் உள்ளன.
• எலும்புத் தொகுதி

• தசைத் தொகுதி
• குருதிச்சுற்றோட்டத் தொகுதி
• சுவாசத் தொகுதி
• சமிபாட்டுத் தொகுதி
• நாளமில்லாச் சுரப்பித் தொகுதி
• நரம்புத் தொகுதி
• கழிவுத் தொகுதி
• சிறுநீரகத் தொகுதி
நரம்புத் தொகுதியின் பாகங்களும் தொழிற்பாடுகளும்
நரம்புகள்
நரம்பு மண்டலம் முழுவதும்,நரம்புத் திசுக்களால் அமையப் பெற்றிருக்கிறது. நரம்பு செல்கள் பல ஒரு நரம்பாக ஆகிவிடுகிறது. நரம்புகள் அவற்றின் செயலுக்கேற்ப இரு வகைப்படும்.

1. உணர்ச்சி நரம்புகள்
ஐம்பொறிகளிலிருந்தும் மற்றும் தேகம் முழுவதிலிருந்தும் செய்திகளை மூளைக்கு எடுத்துச் செல்கிற நரம்புளை உணர்ச்சி நரம்புகள் என்பர். இவற்றை உட்செல்லும் நரம்புகள் எனவும் அழைப்பர்.

2. செய்கை நரம்புகள்
அறிதலை உணர்ந்துகொண்டு, மூளை அனுப்புகிற செய்திகளை எடுத்துக் கொண்டு, உத்திரவாகத் தருகிற பணியை மேற்கொள்கிற நரம்புகளை, செய்கை நரம்புகள் என்பர். அவற்றை வெளிச்செல்லும் நரம்புகள் என்றும் கூறலாம்.

புக் ஹவுஸ்
ReplyDelete