Friday, 27 October 2017

அளவீடு

அளவீடு என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.[1][2]. அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் இயலைஅளவியல் (en:Metrology எனலாம். அளத்தல் அறிவியலுக்கு அடிப்படை என்பதனால் அளவியலும் அறிவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும்.
ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. கணிதம்இயற்பியல்கட்டுபாட்டுவியல்புள்ளியியல்கணினியியல் ஆகிய துறைகளும்அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.[3] இயற்கை அறிவியல் மற்றும் பொறியியலில் அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. அவை பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளன.[2] இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிபரவியல் சமூக அறிவியல் மற்றும் நடத்தை அறிவியலில் அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.
வணிகம்அறிவியல்தொழில்நுட்பம், அளவுசார் ஆய்வு ஆகியவற்றின் பல துறைகளிலும் அளவியல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு அளவியல் முறைகள் மனிதகுலம் தோன்றியது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பங்குதாரர்கள் அல்லது உடனுழைப்பவர்களுக்கிடையே ஏற்படும் இடம்சார்ந்த உடன்பாட்டின் அடிப்படையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டு முதல் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கத்தில் அனைவராலும் ஏற்று நடைமுறைப்படுத்தப்படும் முறை ஒன்றை நோக்கி நகர்ந்தது. அவ்வாறு தரப்படுத்தப்பட்ட, பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையே அனைத்துலக முறை அலகுகள் முறையாகும். இந்த முறையானது பொருள்சார் அளவீடுகள் அனைத்தையும் ஏழு அடிப்படை அலகுகள் இணைந்த கணிதவியல் அளவீடாக மாற்றிக் கொடுத்தது.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...