Saturday 28 October 2017

வேதியியலில் தனிமம் (இலங்கை வழக்கு: மூலகம்) என்பது அடிப்படையான தனிப்பட்ட ஒருவகை அணு ஆகும். ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு. இந்த அணுவெண் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் (புரோட்டான்கள்) எண்ணிக்கை ஆகும். இது ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு தனிச்சிறப்பான எண். பரவலாக அறியப்படும் ஹைட்ரஜன் (இலங்கைத் தமிழ்: ஐதரசன்), ஆக்ஸிஜன்(இலங்கைத் தமிழ்: ஒட்சிசன்), நைட்ரஜன் (இலங்கைத் தமிழ்: நைதரசன்), தங்கம்வெள்ளிஇரும்பு போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும்.
நீர் என்பது இரு தனிமங்கள் சேர்ந்த ஒரு மூலக்கூறு ஆகும். நீரானது இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்த ஒரு மூலக்கூறு. உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பானது சோடியம் என்னும் தனிமமும், குளோரின் என்னும் தனிமமும் சேர்ந்த சோடியம் குளோரைடு என்னும் ஒரு மூலக்கூறு. நம் உடல் உட்பட, நாம் அறியும் எல்லாப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்கள் சேர்ந்த மூலக்கூறுகளாலும் ஆனவையே.
தனிமங்கள் என்பது புவிக்கோளில் மட்டும் அல்லாது சூரியன் நிலவு, நட்சத்திரங்கள் ஆகிய அனைத்திலும் இருப்பவை ஆகும்.
2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட புளுட்டோனியம் வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. எஞ்சியுள்ளன செயற்கையாக ஆய்வகங்களில் மிக மிகச் சிறிதளவு செய்து ஆய்வு செய்யப்படுவன. அணுவெண் 83 கொண்ட பிஸ்மத்என்னும் தனிமமும் அதற்கு அதிகமான அணுவெண் கொண்ட தனிமங்களும் நிலையற்ற வடிவம் கொள்வன. இயற்கையாகவே அணுச்சிதைவுற்று, பிற தனிமங்களாக காலப்போக்கில் மாறுவன.


முதன் முதலாக தனிமங்களை அட்டவணைப்படுத்திய டிமித்திரி மெண்டலீவின் 1869 ஆம் ஆண்டுப் பட்டியல்

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...