இராபா்ட் வில்லியம் பாயில்
இராபர்ட்டு வில்லியம் பாயில் | |
---|---|
இராபர்ட்டு வில்லியம் பாயில் (1627–91)
| |
பிறப்பு | 25 சனவரி 1627 இலிசுமோர், வாட்டர்போர்டு கவுண்ட்டி, அயர்லாந்து |
இறப்பு | 31 திசம்பர் 1691(அகவை 64) இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | ஐரிசுக்காரர் |
துறை | இயற்பியல், வேதியியல் |
கல்வி | ஈட்டன் கல்லூரி |
Notable students | இராபர்ட்டு ஊக்கு |
அறியப்படுவது | |
தாக்கம் செலுத்தியோர் | |
பின்பற்றுவோர் | ஐசக் நியூட்டன்[3] |
விருதுகள் | FRS (1663)[4] |
இராபர்ட்டு வில்லியம் பாயில் FRS [4] (Robert William Boyle, 25 ஜனவரி 1627 - 31 டிசம்பர் 1691) ஓர் ஆங்கிலேய-ஐரிசு இனத்தைச் சார்ந்தவர். இயற்கைத் தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான இவர் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் உலகின் முதல் நவீன வேதியியலாளராகக் கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்தார். இவரது படைப்புகளில் ஒன்றான தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் ஒரு மூல நூலாகக் கருதப்படுகிறது. இவர் இறைபக்தி நிறைந்து விளங்கியவர் என்பதை இறையியல் சார்ந்த அவரது எழுத்துக்கள் மூலம் அறியலாகிறது.
No comments:
Post a Comment