ஆஃபா தத்துவம் ( Aufbau principle )செருமன் மொழியில் Aufbau என்ற சொல்லின் பொருள் கட்டமைப்புச் சேர் என்பதாகும். ஆஃபா விதி அல்லது கட்டமைப்புச் சேர் தத்துவம் என்றும் இதை அழைக்கலாம். இத்தத்துவத்தின் மூலம் ஓர் அணுவின் அல்லது ஒருமூலக்கூறின் அல்லது ஒர் அயனியின்எலக்ட்ரான் கட்டமைப்பைக் கண்டறியலாம். ஓர் அணுவில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஏறுமுக வரிசையில் அதிகரிக்கும்போது அவை எவ்வாறு கட்டமைப்பில் சேர்கின்றன என்பதை இத்தத்துவத்தின் ஆரம்பநிலை கருதுகோள்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு எலக்டரான்களின் எண்ணிக்கை உயரும் நிலையில் அணுவின் உட்கருவை மையமாகக் கொண்டும் ஏற்கனவே அங்குள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கொண்டும் அவை தங்களுக்குரிய நிலையான ஆர்பிட்டாலை அனுமானம் செய்கின்றன.
இத்தத்துவத்தின் படி எலக்ட்ரான்கள் ஆற்றல் மிகக்குறைந்தஆர்பிட்டால்களில் நிரம்பிய பிறகு அதற்கு அடுத்த அதிக ஆற்றலை உடைய ஆர்பிட்டால்களுக்குச் செல்லமுடியும். உதாரணமாக 2sஆர்பிட்டால் நிரம்புவதற்கு முன்னால் 1sஆர்பிட்டால் நிரம்பும். ஒவ்வொரு ஆர்பிட்டால்களிலும் இடம்பெற வேண்டிய எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பவுலி தவிர்ப்புத் தத்துவம் கட்டுப்படுத்துகிறது. ஒருவேளை சம அளவு ஆற்றல் கொண்ட பல ஆர்பிட்டால்கள் இருக்க நேர்ந்தால் ஊண்ட் விதிப்படிஎலக்ட்ரான்கள் நிரம்பும். அதாவது சம அளவு ஆற்றல் கொண்ட ஒவ்வொரு ஆர்பிட்டால்களிலும் ஒரு எலக்ட்ரான் நிரம்பியே பிறகே மீண்டும் மாறுபட்ட சுழற்சி கொண்ட இணை எலக்ட்ரான்களாக நிரம்பத் தொடங்கும். அணுக்களின் உட்கருவில்புரோட்டான்கள் மற்றும்நியூட்ரான்களின் அமைப்பை ஆஃபா தத்துவத்தின் வேறொரு வடிவம் விளக்குகிறது.
No comments:
Post a Comment