Thursday 21 December 2017

இணைதிறன் எதிர்மின்னி

இணைதிறன் எதிர்மின்னி


அணுக்களின் வெளிப்புற வலயத்தில் (விட்டத்தில்) சுற்றும் எதிர்மின்னிகளுக்கு இணைதிறன் எதிர்மின்னி அல்லது வலுவளவு எதிர்மின்னி (valence electron) என்று பெயர் . ஓர் அணு மற்றொரு அணுவுடன் இணைந்து சேர்மமாகும் (மூலக்கூறு ஆகும்) பொழுதோ பிறவாறு வேதியியல் வினைகளில் பங்கு கொள்ளும்பொழுதோ இந்த புற வலய எதிர்மின்னிகள் பங்கு கொள்வதால் இவற்றை இணைதிறன் எதிர்மின்னிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை இயை எதிர்மின்னிகள் என்றும், இவ் எதிர்மின்னிகள் உள்ள புற வலயத்தை இயைனி வலயம் என்றும் அழைக்கப்படும். அணுவின் வெளிப்புற வலயத்தில் நிரம்பி இருக்ககூடிய எல்லா இணைதிறன் எதிர்மின்னிகளும் ஓரணுவில் இருந்துவிட்டால், அவ்வணு தன் இணைதிறன் எதிர்மின்னிகளை மற்ற அணுக்களோடு வினை புரிவதற்கு தராது. இயைனி வலையத்தில் அது கொள்ளக்கூடிய எதிர்மின்னி எண்ணிக்கையினும் குறைவாக எதிர்மின்னிகள் இருந்தால் மட்டுமே எதிர்மின்னிகளை ஏற்றோ, இழந்தோ வேதிப் பிணைப்புகள் ஏற்படுகின்றன. புற வலயத்தில் அதிக அளவாகக் கொள்ளக்கூடிய எதிர்மின்னிகளின் எண்ணிக்கை அணுக்களின் வகைகளைப் பொருத்தது.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...