காற்றில் கார்பண்டை ஆக்சைட் இருப்பதை ஒரு எளிய பரிசோதனை மூலம் நிரூபித்துக் காட்டல்.
- பெரிய உருளை வடிவமான நீண்ட அளவு கண்ணாடிக் குடுவை
- இரண்டு ‘L’ வடிவ குறுகிய கண்ணாடிக் குழாய்கள்.
- தெளிந்த சுண்ணாம்பு கரைசல்
- இரட்டைத் துளையுள்ள ஒரு கார்க்.
செய்முறை –
மேலே வரைந்துள்ள படத்தில் உள்ளதுபோல் பெரிய உருளை வடிவமான நீண்ட கண்ணாடிக் குடுவையை எடுத்துக் கொள்ளவும். தெளிந்த சுண்ணாம்புக் கரைசலை குடுவையின் கால் பங்கு அளவு ஊற்றவும்.
இரண்டு துளையுள்ள கார்க்கை கண்ணாடிக் குடுவையில் காற்றுப் புகாதபடி மூடவும்.
‘A’ என்ற ‘L’ வடிவ கண்ணாடி குழாயினை சுண்ணாம்புக் கரைசலில் படத்தில் காண்பித்த படி நன்கு மூழ்கும் படி இடது பக்க துளையின் வழியாக சொருகவும். ஆனால், ‘B’ என்ற ‘L’ வடிவ கண்ணாடி குழாயினை சுண்ணாம்புத் திரவத்தைத் தொடாமல், திரவத்தின் மேலே இருக்கும் படி வலது பக்க துளையின் வழியாக அமைக்கவும்.
குழாய் B மூலமாக காற்றை உறிஞ்சவும்.
குழாய் A வழியாக வெளிக்காற்று உந்தப்பட்டு, சுண்ணாம்புக் கரைசலில் வந்து கரைகிறது. சிறிது நேரத்தில் சுண்ணாம்பு நீர் பால் போல நிறம் மாறும்.
இதே முறையை பல தடவைகள் செய்தால் பால் போன்ற நிறம் மாறி தெளிந்த நிறமற்ற நீர் கிடைக்கும்.
விளக்கம் –
முதன் முறையாக வெளிக்காற்று தெளிந்த சுண்ணாம்பு நீரில் கரைகிறது. இதன் மூலம், சுண்ணாம்பு நீர் என்ற கால்சியம் ஹைடிராக்ஸைடு - calcium hydroxide - வெளிக்காற்றின் கார்பன் டை ஆக்சைடினால் வினை புரிந்து கால்சியம் பை கால்பனேட்டாக - calcium bicarbonate - மாற்றமடைகிறது. அதன் காரணமாக, கரைசல் நீர் பால் போல் தோற்றம் தருகிறது. இந்த கால்சியம் பை கார்பனேட் நீரில் கரையாது.
அதிக நேரம் ஊதிக் கலக்கும் காற்றினால் அதிக கார்பன் டை ஆக்ஸைடு கரைசல் நீரில் கரைகிறது. அதனால், கால்சியம் பை கார்பனேட்டானது, கால்சியம் கார்ப்பனேட்டாக - calcium carbonate - மாறுகிறது. கால்சியம் கார்ப்பனேட் நீரில் கரையக் கூடியது. ஆகவே தெளிந்த நீர் கிடைக்கிறது.
இதனால், நாம் கீழ்க்கண்டவற்றை இந்த ஆய்வின் மூலம் அறிகிறோம் -
- காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு இருக்கிறது.
- கால்சியம் பை கார்பனேட் நீரில் கரையாது.
- கால்சியம் கார்பனேட் நீரில் கரையக்கூடியது.
No comments:
Post a Comment