Friday 15 December 2017

வடகொரியா ஆறாவது முறையாக ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை நடத்தியது. இந்தச் சோதனை வெற்றியடைந்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
தென்கொரியாவின் சியோல் வானிலை ஆய்வு மையம், வடகொரியாவின் ஹம்யாங் மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 12.29 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் செயற்கையான முறையில் நிலஅதிர்வு ஏற்பட்டதாகவும், இது வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனையால் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
nk-1
மேலும், வடகொரியா இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு நடத்திய அணுகுண்டு சோதனனையக் காட்டிலும் இது ஐந்து முதல் ஆறு மடங்கு சக்தி வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளது. வடகொரியா தனது பலத்தை நிருபிக்கும் வகையில் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் தொடந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை மீண்டும் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. இது, ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் வான்பகுதியைக் கடந்து சென்று கடலில் விழுந்தது.
nk-2
கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஹைட்ரஜன் அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த அணுகுண்டு 0.5 முதல் ஒரு கிலோடன் சக்தி கொண்டது. இதனைத்தொடர்ந்து 2009ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி இரண்டு முதல் நான்கு கிலோ டன் வரையிலும்; 2013ஆம் ஆண்டு பிப்.12ஆம் தேதி ஆறு முதல் ஒன்பது கிலோ டன் வரையிலும்; 2016ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி ஏழு முதல் ஒன்பது கிலோ டன் வரையிலும்; 2016ஆம் ஆண்டு ஏப்.9ஆம் தேதி 10 கிலோ டன் வரையிலும்; 2017ஆம் ஆண்டு செப்.3 (இன்று) 100 கிலோ டன் வரையிலும் சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...