Friday 18 August 2017

செல் பிரிதல்

செல் பிரிதல் வகைகள் செல் பிரிதல் என்பது சிக்கலான நிகழ்ச்சி. இதில் செல் பொருட்கள், சேய் செல்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. உயிரினங்களில் செல்பகுப்பு மூன்று வகைபடும். அவையாவன
  1. ஏ மைட்டாஸிஸ்
  2. மைட்டாஸிஸ்
  3. மியாஸிஸ்
W.பிளெம்மிங் என்பவர் 1882 ஆம் ஆண்டு மைட்டாஸிஸ் செல் பகுப்பை விவரித்தார். அதே ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்கர் தாவரங்களில் மைட்டாஸிஸ் நிகழும் விதத்தை விவரித்தார்.
மூன்று வகை செல்பிரிதல்

மைட்டாஸிஸ்

தாவரங்களில் தண்டு மற்றும் வேர் நுனிகளில் மைட்டாஸிஸ் செல் பகுப்பு மிக செயல் திறனுடன் நடைபெறுகிறது. மேம்பாடு அடைந்த விலங்குகளிலும் மைட்டாஸிஸ் செல் பகுப்பு பரவலாக நடைபெறுகிறது. மைட்டாடிக் செல் சுழற்சி ஒரு நீண்ட இடை நிலையையும் (interface) குறுகிய M நிலையையும் ( மைட்டாடிக் நிலை- இதில் புரோ நிலை, மெட்ட நிலை, அனா நிலை மற்றும் டீலோநிலை ஆகியவை உள்ளன), சைட்டோகைனஸிஸையும் உடையது. இடைநிலை மற்றும் M நிலை ஆகியவற்றின் நடைபெறும் நேரம் பல விதமான செல்களில் வேறுபடுகிறது.

புரோ நிலை

குரோமாட்டின் வலைபின்னல் சுருங்க ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு குரோமோசோமும் தனித்து ஒரு நூல் போல் காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு குரோமோசோமும் இப்போது இரண்டு குரோமேட்டிகளை உடையது. அவை ஒன்றுக்கொன்று அருகருகே உள்ளன. அவைகளை சென்ட்ரோமியர் ஒன்றாகப் பிணைகிறது. நியூக்ளியஸ் மெதுவாக மறைய ஆரம்பிக்கிறது.

மெட்ட நிலை

நியூக்ளியஸ் உறை மற்றும் நியூக்ளியோலஸ் மறைய ஆரம்பிப்பது மெட்டா நிலையின் ஆரம்பத்தைக் குறிக்கும். குரோமோசோம்கள் இன்னும் சுருங்கி தடிமனாகிறது. இறுதியாக குரோமோசோம்கள் கூட்டு நுண்ணோக்கியில் தெளிவாக தெரிகின்றன. குரோமோசோம்கள் செல்லின் மையப் பகுதியில் அமைகின்றன. சென்ட்ரோமியர்கள் செல்லின் மையப் பகுதியில் வந்து அமைந்து மெட்டா நிலை தட்டு அல்லது மையத் தட்டை தோற்றுவிக்கின்றன. ஒரு குரோமோசோமின் இரண்டு குரோமேட்டிடுகளில் ஒன்று ஒரு துருவத்தையும் மற்றொன்று மற்றொரு துருவத்தையும் நோக்கி உள்ளது.

அனா நிலை


சென்ட்ரோமியரின் பகுப்பு அனா நிலையின் ஆரம்பத்தை குறிக்கிறது. ஸ்பின்டில் இழைகள் சுருங்க ஆரம்பிக்கின்றன. இதனால் இரண்டு குரோமோசோம் தொகுப்புகளும் எதிர் எதிர் துருவங்களுக்கு இழுக்கப்படுகின்றன. இவ்வாறு இழுக்கப்படும் போது V அல்லது J அல்லது I வடிவத்தை அடைகின்றன. சென்ட்ரோமியர் துருவத்தை நோக்கி முன் செல்கையில் குரோமோசோம்களின் புயங்கள் மெதுவாக நகர்கின்றன.

டீலோ நிலை

அனா நிலை இறுதியில் குரோமோசோம்கள் எதிர் எதிர் துருவத்தை அடைந்து நீள ஆரம்பக்கின்றன. அவை மெல்லியதாக மாறி கண்ணுக்குப் புல்ப்படாமலும் போகின்ற. நியூக்ளியஸ் உறை மற்றும் நியூக்ளியோலஸ் மறுபடி தோன்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு துருவத்துலும் ஒரு சேய் செல் என இரண்டு செல்கள் தோன்றுகின்றன.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...