Monday 14 August 2017

விலங்கு செல்

விலங்கு செல்

பிளாஸ்மா படலம் செல்லை சுற்றியுள்ள படலம். செல்லுக்கு வடிவம் கொடுப்பது. செல்லுக்குள் தேவையானவற்றை மட்டுமே அனுமதிக்கும்.

புரோட்டோபிளாசம்

பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் பெயரிட்டவர் - ஜே.இ.பர்க்கின்ஜி புரோட்டோ - முதன்மை, பிளாஸ்மா - கூழ்

சைட்டோ பிளாசம்

பிளாஸ்மாவிற்கும், உட்கருவிற்கும் இடைப்பட்ட பகுதி செல்லின் உட்கருவை பாதுகாப்பது. செல்லின் வேலையை தடங்கள் இல்லாமல் செய்வது.

உட்கரு

கோள வடிவம் கொண்ட செல்லின் முக்கியப் பகுதி. செல்லின் நடுவில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. உடல் வடிவத்தை தீர்மாணிப்பது உட்கருச் சாறு, உட்கருச் சவ்வு, உட்கரு மணி (நியூக்கிளியோலஸ்), குரோமோட்டின் வலைப்பின்னல் கொண்டது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபுப் பண்புகளை எடுத்துச் செல்வது.

மைட்டோ காண்ரியா

செல்லின் சுவாசம் செல்லின் ஆற்றல் மையம் உணவை ஆற்றலாக மாற்றும் வேலை செய்வது.

கோல்கை உறுப்புகள்

குழல் குழலாக இருக்கும். உணவு செரிமானம் அடைய நொதிகளை சுரப்பது. உணவிலிருந்து புரதத்தை பிரித்து செல்லுக்கும், உடலுக்கும் வலு சேர்ப்பது.

எண்டோபிளாச வலை

செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்.

ரிபோசோம்கள்

புள்ளி புள்ளியாக இருக்கும். செல்லின் புரதத் தொழிற்சாலை.

லைசோசோம்கள்

உருண்டையாக, மஞ்சலாக இருக்கும். உள்ளே நுழையும் நுண் கிருமிகளை கொல்லும் (செல்லின் காவலர்கள்). செல்லின் தற்கொலைப் பைகள் செறித்தல் வேலையை செய்யும்.

சென்ட்ரோசோம்

தலைமுடி போல் வெள்iயைhக இருக்கும். விலங்கு செல்லில் மட்டும் இருக்கும். இதனுள் சென்ட்ரியோல்கள் உள்ளன. புதிய செல்களை (செல் பிரிதல்) உருவாக்குவது.

நுண்குமிழிகள்

வெளீர் நீல நிறத்தில் ஒரு குமிழ் மாதிரி இருக்கும். சத்து நீரை சேமிப்பது. செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேணுவது.

செல் சுவர்

செல்லுக்கு வடிவத்தை தரும் வெளி உறை செல்லுலோசினால் ஆனது. செல்லின் உள் உறுப்புகளை பாதுகாப்பது.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...