Saturday, 23 December 2017

வீழ்படிதல்

வீழ்படிதல்


ஒரு கரைசலில் கரைபொருள் பூரிதம் அடைந்தபிறகு திடப் பொருளாக கீழே படிவது வீழ்படிதல் ஆகும். கரைசலின் கீழ் படியும் திடநிலையிலுள்ள கரைபொருள் வீழ்படிவு எனப்படும். இது இரசாயனத் தாக்கத்தினாலும் ஏற்படுகின்றது.

Friday, 22 December 2017

இராபா்ட் வில்லியம் பாயில்

இராபா்ட் வில்லியம் பாயில்

இராபர்ட்டு வில்லியம் பாயில்
Robert Boyle 0001.jpg
இராபர்ட்டு வில்லியம் பாயில் (1627–91)
பிறப்பு25 சனவரி 1627
இலிசுமோர், வாட்டர்போர்டு கவுண்ட்டி, அயர்லாந்து
இறப்பு31 திசம்பர் 1691(அகவை 64)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்ஐரிசுக்காரர்
துறைஇயற்பியல், வேதியியல்
கல்விஈட்டன் கல்லூரி
Notable studentsஇராபர்ட்டு ஊக்கு
அறியப்படுவது
தாக்கம்
செலுத்தியோர்
பின்பற்றுவோர்ஐசக் நியூட்டன்[3]
விருதுகள்FRS (1663)[4]
இராபர்ட்டு வில்லியம் பாயில் FRS [4] (Robert William Boyle, 25 ஜனவரி 1627 - 31 டிசம்பர் 1691) ஓர் ஆங்கிலேய-ஐரிசு இனத்தைச் சார்ந்தவர். இயற்கைத் தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான இவர் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் உலகின் முதல் நவீன வேதியியலாளராகக் கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்தார். இவரது படைப்புகளில் ஒன்றான தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் ஒரு மூல நூலாகக் கருதப்படுகிறது. இவர் இறைபக்தி நிறைந்து விளங்கியவர் என்பதை இறையியல் சார்ந்த அவரது எழுத்துக்கள் மூலம் அறியலாகிறது.

Thursday, 21 December 2017

இணைதிறன் எதிர்மின்னி

இணைதிறன் எதிர்மின்னி


அணுக்களின் வெளிப்புற வலயத்தில் (விட்டத்தில்) சுற்றும் எதிர்மின்னிகளுக்கு இணைதிறன் எதிர்மின்னி அல்லது வலுவளவு எதிர்மின்னி (valence electron) என்று பெயர் . ஓர் அணு மற்றொரு அணுவுடன் இணைந்து சேர்மமாகும் (மூலக்கூறு ஆகும்) பொழுதோ பிறவாறு வேதியியல் வினைகளில் பங்கு கொள்ளும்பொழுதோ இந்த புற வலய எதிர்மின்னிகள் பங்கு கொள்வதால் இவற்றை இணைதிறன் எதிர்மின்னிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை இயை எதிர்மின்னிகள் என்றும், இவ் எதிர்மின்னிகள் உள்ள புற வலயத்தை இயைனி வலயம் என்றும் அழைக்கப்படும். அணுவின் வெளிப்புற வலயத்தில் நிரம்பி இருக்ககூடிய எல்லா இணைதிறன் எதிர்மின்னிகளும் ஓரணுவில் இருந்துவிட்டால், அவ்வணு தன் இணைதிறன் எதிர்மின்னிகளை மற்ற அணுக்களோடு வினை புரிவதற்கு தராது. இயைனி வலையத்தில் அது கொள்ளக்கூடிய எதிர்மின்னி எண்ணிக்கையினும் குறைவாக எதிர்மின்னிகள் இருந்தால் மட்டுமே எதிர்மின்னிகளை ஏற்றோ, இழந்தோ வேதிப் பிணைப்புகள் ஏற்படுகின்றன. புற வலயத்தில் அதிக அளவாகக் கொள்ளக்கூடிய எதிர்மின்னிகளின் எண்ணிக்கை அணுக்களின் வகைகளைப் பொருத்தது.

Wednesday, 20 December 2017

கற்றல் முறைகள்


பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் ஆசிரியர் மைய கற்பித்தல் விரிவுரை முறை தேர்வு எழுதினோம்.்
   கற்றல் கற்பித்தல் பாட வேளையில் மாணவர் மைய கற்பித்தல் ஆசிரியர் மைய கற்பித்தல் முறைகளை தெரிந்து கொண்டோம்.
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் கோத்தாரி கல்வி குழு அறிக்கைகள் அறிந்து கொண்டோம்.
  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளிம்பு நிலை குழந்தைகளின் பிரச்சனைகள் தீர்க்க வேண்டிய முறைகளை கற்று கொண்டோம்.
  அடுத்த இரு பாட வேளைகளிலும் குழந்தை பருவ வளர்ச்சி நிலைகளிலுமுள்ள குழந்தை மேம்பாட்டில்,சமூகவியல்பாக்கும் முகமைகள் பற்றி தெரிந்து கொண்டோம். மேலும் பாலின வார்ப்பட்ட எண்ணங்களும்,பாலின பொறுப்புகளும் தெரிந்து கொண்டோம்.

Monday, 18 December 2017

எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு அணு மாதிரி[தொகு]

அடிப்படை அணு மாதிரி:எலக்ட்ரான்கள் பச்சை நிறத்தில் மற்றும் உட்கரு சிவப்பு நிறத்தில்
அணுவில் எலக்ட்ரான்களும் புரோட்டான்களும் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அறியும் பொருட்டு 1911 ஆன் ஆண்டில் எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு ஒரு சிதறும் சோதனையை நடத்தினார்.கதிரியக்க மூலத்தில் இருந்து பெறப்பட்ட அதிவேகமாக நகரும் நேர்மின்னூட்டம் உடைய ஆல்பா துகள்களை மெல்லிய தங்கத் தகட்டின் மீது மோத வைத்தார் [2]. இம்மோதல்கள் ஏற்படுத்திய சிதறல்கள் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தன்னுடைய அணு குறித்த கருத்துகளை வெளியிட்டார்.
1. மெல்லிய தகட்டின் ஊடாக பெரும்பகுதியான ஆல்பா துகள்கள் எளிதில் ஊடுருவிச் சென்றதால் அணுவின் பெரும்பகுதி வெற்றிடமாகும்.
2. ஒருசில ஆல்பா கதிர்கள் விலக்கம் அடைந்தன. அதிகமான விலக்கு விசையே இப்பண்பிற்கான காரணமாகும். இதன்படி அணுவின் நேர்மின்னோட்டம் ஜான்சன் கூறியபடி எல்லா பகுதிகளிலும் பரவி அமையவில்லை. குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் நேர்மின்னூட்டமானது செறிவுற்று அமைந்துள்ளது. நேர்மின்னூட்டம் செறிவுற்றுள்ள இப்பகுதியில் ஆல்பா துகள்கள் விலக்கம் அடைகின்றன். இப்பகுதியே அணுவின் உட்கரு ஆகும்.
3.அணுவின் பருமனை ஒப்பிடும்போது உட்கரு அடைத்துக் கொள்ளும் பருமன் மிக மிகச் சிறியது ஆகும். அணுவின் ஆரம் 10-10 என வைத்துகொண்டால் உட்கருவின் ஆரம் 10-15 ஆகும்.
மேற்கண்ட ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில் ரூதர்போர்டு தன்னுடைய அணுக்கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
1. அணுவின் மையப்பகுதியில் நுண்ணிய நேர்மின்னூட்டம் கொண்ட உட்கரு அமைந்துள்ளது [3].
2. உட்கருவின் நேர்மின்னூட்டத்திற்கு புரோட்டான்கள் காரணமாகும். உட்கருவின் நிறையானது அதில் இடம்பெற்றுள்ள புரோட்டான்களும், அதற்கு இணையான நடுநிலைத்தன்மை கொண்ட வேறொரு பொருளைப் பொருத்தும் அமைகிறது. இவ்வகை நடுநிலைத் துகளே நியூட்ரான்கள் ஆகும். 1932 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் சாட்விக் என்பவர் நியூட்ரான் துகள்களைக் கண்டறிந்தார்

Sunday, 17 December 2017

வேதியியல்

வ

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...