Monday 15 January 2018

கற்பித்தல் முறை

கற்பித்தல் முறை

கற்பித்தல் முறை (Teaching methodமாணவர் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது. இந்த உத்திகள் பகுதியளவில் கற்பவரின் இயல்பின் அடிப்படையிலும், பகுதியளவில் கற்பிக்கப்படும் பாடப்பொருளின் அடிப்படையிலும். அமைந்திருக்கும்.
ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் முறை பொருத்தமானதாக மற்றும் செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். அது கற்பவரின் தன்மையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். கற்பவரின் இயல்பிற்கும், பாடப்பொருளின் தன்மைக்கும் ஏற்ப கற்பித்தல்முறைகள் வடிவமைக்கப்படவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படவும் வேண்டும். [1] இன்றைய பள்ளிகள் பகுத்தறிதலை ஊக்குவிக்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும் செய்கிறது.
கற்பிப்பதற்கான அணுகுமுறைகள் பொதுவாக ஆசிரியர் மைய முறையாகவும் மாணவர் மைய முறையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன
.ஆசிரியர் மைய முறையில் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள், மாணவர்கள்ஆசிரியர்கள் கூறுவதை மெளனமாக கேட்டு கற்றலில் ஈடுபடுவர்.ஆசிரியர்கள் மைய கற்பித்தல் அணுகுமுறையில், ஆசிரியர்கள் அதிகார மையங்களாக விளங்குகிறார்கள். தேர்வு (Test) மற்றும் மதிப்பீட்டின் (Evaluation) மூலம் மாணவர்களின் கற்றல் அடைவுகள் சோதிக்கப்படுகிறது. [2]
மாணவர் மைய முறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் சமமாக செயல்படுகின்றனர். மாணவர்கள்பாடப்பொருளை முழுவதுமாக புரிந்து கொள்ள வைப்பதும் மற்றும் பாடப்பொருளை எளிதாக்குவதும் ஆசிரியரின் முதன்மைச் செயல்பாடாகும். நேரடியாக அல்லது மறைமுகமாக மாணவர்களின் கற்றல் அளவிடப்படுகிறது. ஆசிரியர் இங்கே ஒரு பயிற்றுநராகவும் (Coach) ,வழிநடத்துபவராகவும் (Facilitator) செயல்படுகிறார்.[2].மாணவர்களின் கற்றல் குழுச் செயல்பாட்டின் மூலமும்,மாணவனின் வகுப்பறை செயல்பாட்டின் மூலமும் அளவிடப்படுகிறது.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...