Wednesday, 8 November 2017

தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் என்பது தனிமங்களின் பெயரி சுருக்கமாக எழுதப்ப்படும் குறியெழுத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தின் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர அடிப்படை மற்றும் பயன்பாட்டு வேதியியலுக்கான அனைத்துல ஒன்றியம் (International Union of Pure and Applied Chemistry) ஏற்றுக்கொண்ட வேதியியல் குறியெழுத்துக்களையும், வரலாற்று வழக்கான குறியெழுத்துக்களையும் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

பொருளடக்கம்

தற்காலக் குறியெழுத்துக்கள்

குறியெழுத்து பெயர் குறியெழுதின் அடிப்படை அணு எண் அணுப் பொருண்மை நெடுங்குழு கிடை வரிசை
Ac ஆக்டினியம்   89 [227]1   7
Ag வெள்ளி இலத்தீன் Argentum 47 107.8682(2)2 11 5
Al அலுமினியம்   13 26.9815386(8) 13 3
Am அமெரிக்கம்   95 [243]1   7
Ar ஆர்கான் - Argon   18 39.948(1)2 4 18 3
As ஆர்சனிக் - Arsenic   33 74.92160(2) 15 4
At அஸ்டாட்டைன்   85 [210]1 17 6
Au தங்கம் இலத்தீன் Aurum 79 196.966569(4) 11 6
B போரான்   5 10.811(7)2 3 4 13 2
Ba பேரியம்   56 137.327(7) 2 6
Be பெரிலியம்   4 9.012182(3) 2 2
Bh போஃரியம்   107 [264]1 7 7
Bi பிஸ்மத்   83 208.98040(1) 15 6
Bk பெர்க்கிலியம்   97 [247]1   7
Br புரோமின்   35 79.904(1) 17 4
C கரிமம்   6 12.0107(8)2 4 14 2
Ca கால்சியம்   20 40.078(4)2 2 4
Cd காட்மியம்   48 112.411(8)2 12 5
Ce சீரியம்   58 140.116(1)2   6
Cf கலிஃவோர்னியம்   98 [251]1   7
Cl குளோரின்   17 35.453(2)2 3 4 17 3
Cm கியூரியம்   96 [247]1   7
Co கோபால்ட் - Cobalt   27 58.933195(5) 9 4
Cr குரோமியம்   24 51.9961(6) 6 4
Cs சீசியம் (Cesium)   55 132.9054519(2) 1 6
Cu செப்பு இலத்தீன் Cuprum 29 63.546(3)4 11 4
Db டபினியன்   105 [262]1 5 7
Ds டார்ம்ச்டாட்டியம்   110 [271]1 10 7
Dy டிஸ்ப்ரோசியம   66 162.500(1)2   6
Er எர்பியம்   68 167.259(3)2   6
Es ஐன்ஸ்டினியம்   99 [252]1   7
Eu ஐரோப்பியம்   63 151.964(1)2   6
F ஃவுளோரின்   9 18.9984032(5) 17 2
Fe இரும்பு இலத்தீன் Ferrum 26 55.845(2) 8 4
Fm ஃவெர்மியம்   100 [257]1   7
Fr பிரான்சியம்   87 [223]1 1 7
Ga காலியம்   31 69.723(1) 13 4
Gd கடோலினியம்   64 157.25(3)2   6
Ge ஜெர்மானியம்   32 72.64(1) 14 4
H ஹைட்ரஜன்   1 1.00794(7)2 3 4 1 1
He ஹீலியம்   2 4.002602(2)2 4 18 1
Hf ஹாப்வினியம   72 178.49(2) 4 6
Hg பாதரசம் இலத்தீன் Hydrargyrum 80 200.59(2) 12 6
Ho ஹோல்மியம்   67 164.930 32(2)   6
Hs ஹாசியம்   108 [277]1 8 7
I அயோடின்   53 126.904 47(3) 17 5
In இண்டியம்   49 114.818(3) 13 5
Ir இரிடியம்   77 192.217(3) 9 6
K பொட்டாசியம் (Kalium) இலத்தீன் Kalium 19 39.0983(1) 1 4
Kr கிருப்டான்   36 83.798(2)2 3 18 4
La லாந்த்தனம்   57 138.90547(7)2   6
Li லித்தியம்   3 6.941(2)2 3 4 5 1 2
Lr லாரன்சியம்   103 [262]1 3 7
Lu லூட்டேட்டியம்   71 174.967(1)2 3 6
Md மெண்டலியம்   101 [258]1   7
Mg மக்னீசியம்   12 24.3050(6) 2 3
Mn மாங்கனீசு   25 54.938045(5) 7 4
Mo மாலிப்டினம்   42 95.94(2)2 6 5
Mt மைட்னேரியம்   109 [268]1 9 7
N நைட்ரஜன்   7 14.0067(2)2 4 15 2
Na சோடியம் இலத்தீன் Natrium 11 22.98976928(2) 1 3
Nb நையோபியம்   41 92.906 38(2) 5 5
Nd நியோடைமியம்   60 144.242(3)2   6
Ne நியான்   10 20.1797(6)2 3 18 2
Ni நிக்கல்   28 58.6934(2) 10 4
No நொபிலியம்   102 [259]1   7
Np நெப்டூனியம்   93 [237]1   7
O ஆக்ஸிஜன்   8 15.9994(3)2 4 16 2
Os ஆசுமியம்   76 190.23(3)2 8 6
P பாஸ்பரஸ்   15 30.973762(2) 15 3
Pa புரோட்டாக்டினியம்   91 231.03588(2)1   7
Pb ஈயம் இலத்தீன் Plumbum 82 207.2(1)2 4 14 6
Pd பல்லேடியம்   46 106.42(1)2 10 5
Pm புரோமீத்தியம்   61 [145]1   6
Po பொலோனியம்   84 [210]1 16 6
Pr பிரசியோடைமியம்   59 140.90765(2)   6
Pt பிளாட்டினம்   78 195.084(9) 10 6
Pu புளோட்டோனியம்   94 [244]1   7
Ra ரேடியம்   88 [226]1 2 7
Rb ருபீடியம்   37 85.4678(3)2 1 5
Re ரேனியம்   75 186.207(1) 7 6
Rf ரதர்போர்டியம்   104 2611 4 7
Rg ரோண்டெஜெனியம்   111 [272]1 11 7
Rh ரோடியம்   45 102.905 50(2) 9 5
Rn ரேடான்   86 [220]1 18 6
Ru ருத்தேனியம்   44 101.07(2)2 8 5
S கந்தகம்   16 32.065(5)2 4 16 3
Sb ஆண்ட்டிமனி இலத்தீன் Stibium 51 121.760(1)2 15 5
Sc ஸ்காண்டியம்   21 44.955912(6) 3 4
Se செலீனியம்   34 78.96(3)4 16 4
Sg சீபோர்கியம்   106 [266]1 6 7
Si சிலிக்கான் இலத்தீன் Silicium 14 28.0855(3)4 14 3
Sm சமாரியம்   62 150.36(2)2   6
Sn வெள்ளீயம் இலத்தீன் Stannum 50 118.710(7)2 14 5
Sr ஸ்ட்ரோன்ஷியம்   38 87.62(1)2 4 2 5
Ta டாண்ட்டலம்   73 180.94788(2) 5 6
Tb டெர்பியம்   65 158.92535(2)   6
Tc டெக்னேட்டியம்   43 [98]1 7 5
Te டெலூரியம்   52 127.60(3)2 16 5
Th தோரியம்   90 232.03806(2)1 2   7
Ti டைட்டேனியம்   22 47.867(1) 4 4
Tl தாலியம்]]   81 204.3833(2) 13 6
Tm தூலியம்   69 168.93421(2)   6
U யுரேனியம்   92 238.02891(3)1 2 3   7
Uub உனுன்பியம்   112 [285]1 12 7
Uuh உனுன்ஹெக்ஸியம்   116 [292]1 16 7
Uup உனுன்பெண்ட்டியம்   115 [288]1 15 7
Uuq உனுன்குவாண்டியம்   114 [289]1 14 7
Uut உனுன்றியம்   113 [284]1 13 7
V வனேடியம்   23 50.9415(1) 5 4
W டங்க்ஸ்டன் ஜெர்மன் Wolfram 74 183.84(1) 6 6
Xe செனான்   54 131.293(6)2 3 18 5
Y யிற்றியம்   39 88.90585(2) 3 5
Yb இட்டெர்பியம்   70 173.04(3)2   6
Zn துத்தநாகம்   30 65.409(4) 12 4
Zr சிர்க்கோனியம்   40 91.224(2)2 4 5
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

தற்காலத்தில் பயன்படுத்தாத குறியெழுத்துக்கள்

Chemical Symbol Name Atomic Number Source
A ஆர்கான் 18 Current symbol is Ar.
Ab அலாபாமைன் 85 Discredited claim to discovery of astatine.
Am அலாபமியம் 85 Discredited claim to discovery of astatine.
An ஆக்டினான் 86 Name given at one time to an isotope of ரேடான் identified in the decay chain of அக்டினியம்.
An ஐன்ஸ்டைனியம் 99 Proposed name for ஐன்ஸ்டைனியம்.
Ao Ausonium 93 Discredited claim to discovery of neptunium.
Az நைட்ரசன் 7 Proposed name for நைட்ரசன்.
Bv Brevium 91 Proposed name for protactinium.
Bz Berzelium 59 Proposed name for பிரசியோடைமியம்.
Cb நையோபியம் 41 Former name of நையோபியம்.
Cb நையோபியம் 41 Proposed name for அமெரிசியம்.
Cp Cassiopeium 71 Proposed name for lutetium.
Ct பெர்மியம் 100 Proposed name for பெர்மியம்.
Ct ஆஃபினியம் 72 Former name of ஆஃபினியம்.
Da டெக்னீசியம் 43 Proposed name for டெக்னீசியம்
Db தூப்னியம் 104 Proposed name for rutherfordium. The symbol and name were instead used for element 105.
Di Didymium - Rare earth metal that proved to be a mixture of the elements பிரசியோடைமியம் and நியோடைமியம்.
Dp Decipium 62 Rare earth metal that proved to be a mixture primarily of சமாரியம்.
Eb Ekaboron 21 Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, இசுக்காண்டியம் closely matched the prediction.
El Ekaaluminium 31 Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, காலியம் closely matched the prediction.
Em Ekamangan 43 Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, டெக்னீசியம் closely matched the prediction.
Es Ekasilicon 32 Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, ஜேர்மானியம் closely matched the prediction.
Es Esperium 94 Discredited claim to discovery of புளுட்டோனியம்.
Fa பிரான்சீயம் 87 Current symbol is Fr.
Fr புரோமித்தியம் 61 Discredited claim to discovery of புரோமித்தியம்.
Gl பெரிலியம் 4 Former name of பெரிலியம்.
Ha Hahnium 105 Proposed name for தூப்னியம்.
Ha Hahnium 108 Proposed name for ஆசியம்.
Il புரோமித்தியம் 61 Discredited claim to discovery of புரோமித்தியம்.
Io Ionium 90 Name given at one time to an isotope of தோரியம் identified in the decay chain of யுரேனியம்.
J Iodine - நைலம் 53 In some languages, the name for iodine begins with J instead of I.
Jg ஆஃபினியம் 72 Discredited claim to discovery of ஆஃபினியம்.
Jo Joliotium 105 Proposed name for தூப்னியம்.
Ku Kurchatovium 104 Proposed name for rutherfordium.
Lw Lawrencium 103 Current symbol is Lr.
M குளோரின் 9 Former name of குளோரின்.
Ma டெக்னீசியம் 43 Disputed claim to discovery of டெக்னீசியம்.
Md Mendelevium 97 Proposed name for berkelium. The symbol and name were later used for element 101.
Me Mendelevium 97 Proposed name for எர்பியம். The name was later used for element 101.
Ms இண்டியம் - Discredited claim of discovery of a new element.
Mt Meitnium 91 Proposed name for protactinium.
Mv Mendelevium 101 Current symbol is Md.
Ng ஆஃபினியம் 72 Discredited claim to discovery of ஆஃபினியம்.
Ni Niton 86 Proposed name for ரேடியம்.
No ஆஃபினியம் 72 Discredited claim to discovery of ஆஃபினியம்.
Ns Nielsbohrium 105 Proposed name for தூப்னியம்.
Ns Nielsbohrium 107 Proposed name for bohrium.
Nt Niton 86 Proposed name for ரேடியம்.
Nw Newtonian 67 Proposed name for ஓல்மியம்.
Ny இட்டெர்பியம் 70 Former name of இட்டெர்பியம்.
Od சமாரியம் 62 Proposed name for சமாரியம்
Pc Policium 110 Proposed name for darmstadtium
Pe Pelopium 41 Proposed name for நையோபியம்
Po பொட்டாசியம் 19 Current symbol is K.
Pp ஓல்மியம் - Rare earth metal that proved to be a mixture of other elements.
Rf Rutherfordium 106 Proposed name for seaborgium. The symbol and name were instead used for element 104.
Sa சமாரியம் 62 Current symbol is Sm.
So Sodium - உவர்மம் 11 Current symbol is Na.
Sp இட்டெர்பியம் 70 Proposed name for இட்டெர்பியம்.
St அந்திமனி 51 Current symbol is Sb.
Tn ரேடான் 86 Name given at one time to an isotope of ரேடான் identified in the decay chain of தோரியம்.
Tn தங்குதன் 74 Current symbol is W.
Tu தூலியம் 69 Current symbol is Tm.
Tu தங்குதன் 74 Current symbol is W.
Ty நியோடைமியம் 60 Proposed name for நியோடைமியம்.
Unb Unnilbium 102 Temporary name given to nobelium until the permanent name was chosen.
Une Unnilennium 109 Temporary name given to meitnerium until the permanent name was chosen.
Unh Unnilhexium 106 Temporary name given to seaborgium until the permanent name was chosen.
Uno ஆசியம் 108 Temporary name given to ஆசியம் until the permanent name was chosen.
Unp தூப்னியம் 105 Temporary name given to தூப்னியம் until the permanent name was chosen.
Unq Unnilquadium 104 Temporary name given to rutherfordium until the permanent name was chosen.
Uns Unnilseptium 107 Temporary name given to bohrium until the permanent name was chosen.
Unt Unniltrium 103 Temporary name given to lawrencium until the permanent name was chosen.
Unu Unnilunium 101 Temporary name given to mendelevium until the permanent name was chosen.
Uun Ununnilium 110 Temporary name given to darmstadtium until the permanent name was chosen.
Uuu Unununium 111 Temporary name given to roentgenium until the permanent name was chosen.
Vi பிரான்சீயம் 87 Discredited claim to discovery of பிரான்சீயம்.
Vm பிரான்சீயம் 87 Discredited claim to discovery of பிரான்சீயம்.
Yt யிற்றியம் 39 Current symbol is Y.

தனிமங்களின் குறியெழுத்து போலத் தோன்றும் பிற வேதியியல் பொருட்களின் குறியெழுத்துக்கள்

Tuesday, 7 November 2017

ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு வேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ளவதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் காட்டுகின்றது. இந்த வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக 1869 ல் திமீத்ரி மென்டெலெயேவ் அவர்களின் தனிம அட்டவணை வெளியீடு அமைந்தது.[1] மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே போன்ற சில வேதியலாளர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும் உருசிய வேதியலாளரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தனிமங்களின் (மூலகங்களின்) பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக இலகுவில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் தேவையாகின்றது. இது தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. பெரும்பான்மையான வேதியலாளர்கள் தனிமங்களை வகைப்படுத்தி அவற்றின் பண்புகளை ஆய்ந்தனர்.

பொருளடக்கம்

பழங்காலத்தில் தனிமங்கள்

மக்கள், பழங்காலத்தில், இயற்கையில் உள்ள இயல்பு வடிவத்தில் காணப்படுகின்ற தங்கம், வெள்ளி, செப்பு போன்ற தனிமங்களைத் தெரிந்து கொண்டிருந்தனர். எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி இவற்றை அகழ்ந்தெடுக்க முடிந்தது.[2]

அறிவொளிக் காலம்

செருமானிய நாட்டைச் சேர்ந்த என்னிக் பிராண்ட் (Hennig Brand) எனும் இரசவாதி 1669ம் ஆண்டளவில் பொசுபரசைக் கண்டுபிடித்தார், இதுவே புதியதொரு தனிமத்தை மனிதன் அறிந்ததற்கான முதற்பதிவாக உள்ளது. ஏனைய இரசவாதிகள் போன்று, மதிப்புக் குறைந்த உலோகங்களைத் தங்கமாக மாற்றும், இறவாத்தன்மையைக் கொடுக்கும், இளமையாக உருமாற்றும் ‘தத்துவஞானியின் கல்’ (Philosopher's stone) அல்லது இரசவாதக்கல் என்று அழைக்கப்படும் பதார்த்தம் ஒன்றைத் தேடி இவரும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இத்தகைய ஆய்வில் சிறுநீரைப் பயன்படுத்தி இருந்தார். சிறுநீரை பல படிமுறைகளுக்குட்படுத்தி வடித்தபோது இறுதியில் வெண்மையான பிரகாசிக்கும் பதார்த்தம் ஒன்றைப் பெற்றார், இதற்கு பொசுபரசு எனப் பெயரிட்டார்.[3]

இலாவோசியர்

Antoine Laurent de Lavoisier
1789-ஆம் ஆண்டில் வேதியியல் தனிமங்கள்பற்றிய ஒரு பாடநூலை இலாவோசியர் வெளியிட்டார். இதுவே முதலாவது புதியகாலத்து வேதியியற் பாடநூலாகக் கருதப்படுகின்றது. தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்தப் பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார். தனிமங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்தப் பாட நூலில் இணைத்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக இலவாசியே கண்டு சொன்ன பெரும்பாலான வேதிப்பொருட்கள் இன்றைய தற்கால வேதியியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இவர் தனிமங்களை உலோகங்கள், அல்லுலோகங்கள் என்று மட்டுமே வகைப்படுத்தி இருந்தார்.

டோபரின்னரின் மும்மைகள்

1828-இல் இத்தாலிய வேதியியலாளர் ஜொகான் வோல்வ்காங்க் டோபரின்னர் என்பவர் இயல்பொப்பின் அடிப்படையில் தனிமங்களை மூன்று தொகுதிகளாக வகைப்படுத்தினார். இத்தொகுதிகள் தனிம மும்மைகள் (மூலக மும்மை) எனப்படும். இவ்விதிப்படி மூன்று தனிமங்கள் அவற்றின் அணுநிறையின் ஏறுவரிசையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறையானது மற்ற இரண்டு தனிமங்களின் அணுநிறைகளின் இயற்கணித சராசரியாக இருக்கும்.
உதாரணமாக,
குளோரின், புரோமின், அயோடின் ஆகியவை ஒரு மும்மைத் தொகுதியாக உள்ளது. இலிதியம், சோடியம், பொட்டாசியம் வேறொரு மும்மையாக உள்ளது.
தனிமங்கள் அணுநிறை
குளோரின் (Cl) 35.5
புரோமின் (Br) 80
அயோடின் (I) 127
(35.5 + 127) / 2 = 81.5
தனிமங்கள் அணுநிறை
இலிதியம் (Li) 7
சோடியம் (Na) 23
பொட்டாசியம் (K) 39

தனிம வகைப்படுத்தல்

அலெக்சாண்டர் எமில்

1862-ஆம் ஆண்டளவில் அலெக்சாண்டர் எமில் (Alexandre-Emile Béguyer de Chancourtois) எனும் பிரான்சிய புவியியலாளர் தனிமங்கள் ஓர் ஒழுங்கான இடைவெளியில் அமைந்திருப்பதை அவதானித்தார். இதன்படி ஆரம்ப ஆவர்த்தன அட்டவணை ஒன்றை உருவாக்கினார். வேதியியற் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படாமையினாலும் விளக்கப்படமின்மையாலும் இது பிரபல்யமடையவில்லை.

ஜோன் நியுலாண்ட்ஸ்

J. A. R. Newlands' law of octaves
ஜோன் நியுலாண்ட்ஸ் (John Newlands) எனும் ஆங்கில வேதியியல் அறிஞர் 1865-இல்[4][5] 56 தனிமங்களை வகைப்படுத்தினார். ஒத்த பண்புள்ள தனிமங்களின் அணுநிறை எட்டால் அதிகரித்துக்கொண்டு செல்வதை அவதானித்து ‘எண்ம விதியை’ (அட்டமசுர விதி - law of octaves) முன்மொழிந்தார். சங்கீதத்தில் ச, ரி, க, ம, ப, த, நி, ச எனும் சுரங்களில் ‘ச’ எட்டாவதாகத் திரும்ப அமைவதுபோல அணுநிறை ஏறுவரிசையில் தனிமங்களை ஒழுங்குபடுத்தும்போது இயல்பொத்தவை எட்டாம் இடத்தில் திரும்ப அமையும் என்று விளக்கினார். ஆனால் அவர்காலத்து அறிவியலாளர்களால் இது நிராகரிக்கப்பட்டது.
இவ்விதியானது குறைந்த அணுநிறை கொண்ட தனிமங்களுக்குப் பொருந்தக் கூடியது. ஆனால் அதிக அணுநிறை கொண்ட தனிமங்களுக்குப் பொருந்தாது.

லொதர் மேயர்

ஜூலியஸ் லொதர் வொன் மேயர் எனும் செருமானிய வேதியியல் நிபுணர் 28 தனிமங்களைக் கொண்ட ஆவர்த்தன அட்டவணையை 1864-இல் உருவாக்கினார். இவரது அட்டவணை தனிமத்தின் வலுவளவை மையமாக வைத்து ஆறு தனிமக் குடும்பங்களாக உருவாக்கப்பட்டிருந்தது.

திமீத்ரி மென்டெலேயேவ்

திமீத்ரி இவானவிச் மென்டெலேயேவ் (டிமித்ரி மெண்டெலீவ்) எனும் உருசிய நாட்டு வேதியியல் வல்லுனர் தற்காலத்துப் பயன்பாட்டில் உள்ளதை ஒத்த ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவர் ஆவார். 1869-இல் அப்போது கண்டறியப்பட்ட 63 தனிமங்களை அவற்றின் அணுநிறையின் ஏறுவரிசையில் அட்டவணைப்படுத்தினார். இக்காலத்தில் இலத்திரன்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் உருசிய சஞ்சிகையில் 1869-இல் வெளியான மென்டெலேயேவின் அட்டவணைபற்றிய தகவல்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது:
  1. தனிமங்களை அவற்றின் அணுநிறைக்கேற்ப ஏறுவரிசையில் அமைக்கும்போது அவற்றின் பண்புகள் சீரான இடைவெளிகளில் ஒரே மாதிரியாக இருக்கும்.
  2. வேதியியற் பண்புகள் ஒத்த தனிமங்களின் அணு நிறை கிட்டத்தட்ட ஒரே பெறுமானமாக இருக்கும் (எ.கா: Pt, Ir, Os) அல்லது ஒழுங்கான ஏறுவரிசையில் அமையும் (எ.கா: K, Rb, Cs).
  3. அணுநிறைக்கேற்ப தனிமங்களை அல்லது தனிமக் குழுமங்களை ஒழுங்கமைப்பது அவற்றின் வலுவளவுடனும் (இணைதிறன்), அதேநேரத்தில் சிறிதளவு அவற்றின் சிறப்பு வேதியல் இயல்புடனும் தொடர்புடையதாக இருக்கின்றது.
  4. எதிர்காலத்தில் அலுமினியம் அல்லது சிலிக்கனை ஒத்த வேறு தனிமங்கள் கண்டறியப்படும், இவற்றின் அணுநிறை 65க்கும் 75க்கும் இடையில் இருக்கும்.
அவர் அறிமுகப்படுத்திய தனிமங்களை வகைப்படுத்தும் முறையானது ஆவர்த்தன விதி எனப்படும். இவ்விதிப்படி, தனிமங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் அமைக்கும்போது அவற்றின் பண்புகள் சீரான இடைவெளிகளில் ஒரே மாதிரியாக இருக்கும். ஆவர்த்தன விதியின் அடிப்படையில் மென்டெலேயேவ் தனிமங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் கிடைமட்டமாக வரிசைப்படுத்தினார்.
இதன்படி அணுநிறை குறைந்த தனிமம் இடது பக்கத்திலும், அதைவிட அணுநிறை கூடியது வலது பக்கத்திலும் கிடையாக ஒழுங்குபடுத்தப்பட்டது. இவை ஆவர்த்தனங்களென அழைக்கப்பட்டன. பண்பொத்த தனிமங்கள் நிலை வரிசையில் அமைக்கப்பட்டன. இவை கூட்டங்கள் என்று அழைக்கப்பட்டது. இவற்றின் வேதியியல் வினைகள் ஒரேமாதிரியாக இருந்தன.
மென்டெலேயேவ் தனிம வரிசை அட்டவணையை ஆராயும்போது நிலையாக அமைந்துள்ள அடுத்தடுத்த இரண்டு தனிமங்களுக்கிடையே ஒத்துப் போகும் தன்மை இல்லாததை கண்டறிந்தார். எனவே, இக்குறையைப் போக்குவதற்கு அந்த இடங்கள் வெற்றிடமாக்கப்பட்டு இருந்தது. எதிர்காலத்தில் வேறு தனிமங்கள் கண்டறியப்பட்டபோது அந்த இடங்கள் பொருத்தமாக இருந்தது. உதாரணமாக, காலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகியவை மென்டெலேயேவ் தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியபோது கண்டுபிடிக்கப்படவில்லை. மென்டெலேயேவ் அவற்றை முறையே எகா-அலுமினியம் மற்றும் எகா-சிலிக்கான் என்றும் பெயரிட்டார். ஏனெனில், அவை முறையே அலுமினியம் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் பண்புகளை ஒத்து இருக்கும் என்று நம்பிக்கையிலிருந்தார். பின்னர் இத்தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது இவற்றின் பண்புகள் மென்டெலேயேவ் கூறியவாறு அமைந்திருந்தன.
மென்டெலேயேவ் ஆவர்த்தன அட்டவணையின் குறைகள்:
  1. தனிமங்களின் பண்புகள் அணுநிறையில் தங்கியுள்ளது எனும் தவறான கோட்பாடு.
  2. ஐதரசனுக்குரிய சரியான இடம் தரப்படாமை.
  3. உறழ் வளிமங்களுக்குரிய (மந்த வளிமங்கள் அல்லது சடத்துவ வாயுக்கள்) இடம் ஒதுக்கப்பட்டதெனினும் அவை கொடுக்கப்படவில்லை. உறழ் வளிமங்கள் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது.
புதிய தனிமங்கள் கண்டுபிடித்தலும், தொகுத்தலும் இன்றும் தொடர்வதால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. அணு எண் 92 வரை உள்ள தனிமங்கள் இயற்கையில் கிடைப்பவையாக உள்ளன. எஞ்சியவை ஆய்வகங்களில் தொகுக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ள மற்ற தனிமங்கள் யுரேனியம் கடந்த தனிமங்கள் எனப்படுகின்றன. இவை அதிக நிலைத் தன்மையற்றதாகவும், கதிரியக்கத்தால் சிதைவடைவனவாகவும் உள்ளன.[6]

ஆவர்த்தன அட்டவணையின் புதிதாக்கம்

1913-14 களில் என்ரி மொசெலே (Henry Moseley) என்பவர் தனது பரிசோதனையிலிருந்து ஒரு தனிமத்தின் எக்ஸ்-கதிர் அலை நீளத்துக்கும் அணு எண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தார். ஒரு தனிமம் இன்னொரு தனிமத்துடன் வேறுபட்டுக் காணப்படுவதற்கு அவற்றில் காணப்படும் நேர்மின்னிகளே (புரோத்தன்கள்) காரணம் என்று கண்டுகொண்டார். எனவே தனிமங்களை வரிசைப்படுத்த அவற்றின் அணுநிறையைவிட அணு எண் மிகப்பொறுத்தமானது என்று தீர்மானித்தார். இதன்படி ஆவர்த்தன அட்டவணை மீள ஒழுங்கமைக்கப்பட்டது.
இதனால் ஆர்கன் - பொட்டாசியம் ஒழுங்கமைப்புச் சிக்கலுக்குத் தீர்வு கிடைத்தது. முன்னர் இருந்த ஆவர்த்தன அட்டவணையின்படி இவற்றை ஒரே பண்புள்ள குழுமத்தில் சேர்த்தல் சிக்கலாக இருந்தது. ஏனெனில், ஆர்கனின் (Ar) அணுநிறை (39.9) பொட்டாசியத்தின் (K) அணுநிறையைவிடக் (39.1) கூடுதலாக இருந்தது. ஆர்கன் ஒரு உறழ் வளிமம், ஆனால் பொட்டாசியம் ஒரு கார உலோகம். அணு எண்ணின்படி இவை தத்தமது பண்புடைய குழுமத்தில் சேர்க்கப்பட்டன. இதே போலக் கோபால்ட் - நிக்கல் சிக்கலும் தீர்ந்தது.
மொசெலே மென்டெலேயேவ்வின் கோட்பாடு போன்று அணு எண்கள் 43, 61, 72, 75 உடைய புதிய தனிமங்களுக்கு இடம் ஒதுக்கினார், அதன்படி பின்னர் டெக்னீசியம், புரோமித்தியம், ஆப்வினியம், ரேனியம் முதலியவை கண்டுபிடிக்கப்பட்டன.
1943-இல் கிளென் சீபோர்க் என்பவர் அமெரிக்கம் (95) மற்றும் கியுரியம் (96) ஆகிய தனிமங்களைப் பாகுபடுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டார். இவை வேறொரு குழுமத்தைச் சேர்ந்தவை என்று அறிந்துகொண்டதன் பிரகாரம் ஆவர்த்தன அட்டவணையில் மேலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது; அக்டினைட் வரிசைகள் உருவாக்கப்பட்டன.

Monday, 6 November 2017

ஐசக் நியூட்டன்

ஐசக் நியூட்டன் (டிசம்பர் 251642 - மார்ச் 201727)[2], ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும்அறிவியலாளரும்,தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில்முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய,Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டுநுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்.
நியூட்டனின் பிரின்சிப்பியாவிலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது.
நியூட்டன் நடைமுறைச் சாத்தியமான முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியை உருவாக்கியதுடன், முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் கொண்ட நிறமாலையாகத் தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

இளமை

ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார்.

கல்வி

நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில்சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ்கலிலியோகோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார்.
1665 ல், ஈருறுப்புத் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே.

பணிகள்

1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

கண்டுபிடிப்புகள்

புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும்சூரியமையக் கோட்பாட்டின்வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும்,அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார்.

ஒளியியல் ஆய்வுகள்

பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரேgeshopan. வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.
ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்மைஇரண்டு துணிக்கைளுக்கிடையிலான ஈர்ப்பு விசையானது அவற்றின் திணிவுகளுக்கு நேர்விகிதசமனெனவும் அவற்றுக்கிடையிலான துாரத்துக்கு நேர்மாறுவிகிதசமனெனவும் கருத்தறிவித்தார்.

ஈர்ப்பு விதி கண்டுபிடிப்பு

Isaac-newton 1.jpg
நியூட்டன் ஆப்பிள்(Apple)மரமொன்றின் கீழ் இருந்தபோது, ப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான,வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து.
1667 ல், தனது கண்டுபிடிப்புக்கள் குறித்த முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) என்ற நூலினையும் பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி (De methodis serierum et fluxionum ) என்ற நூலினையும் வெளியிட்டார்.
நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார். நியூட்டனுக்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார்.
1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார்.

விசை பற்றிய கோட்பாடுகள்

  • எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.
  • ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.
  • ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

நியூட்டனின் நூல்கள்

நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடு

நூல்கள்

  • மெத்தேட் ஆஃப் ஃபிளக்சியான்ஸ் (Method of Fluxions) (1671)
  • ஆப்டிக்ஸ் (Opticks) (1704)
  • அரித்மெட்டிகா யுனிவர்சலிஸ் (Arithmetica Universalis) (1707)

சிறப்புகள்

1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார்.ஐசாக் நியூட்டன் இயற்பியல் துறையில் மிகப்பெரிய சாதனை புரிந்திருந்தபோதும் தம் சாதனையைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
நான் இவ்வுலகிற்கு எவ்வாறிருப்பினும் என்னில் பொருத்தமட்டில் நானொரு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன்,மென்மையான கூழாங்கல்லையும் அழகிய சங்கையும் கண்டுள்ளேன்,ஆனால் விரிந்து பரந்துள்ள பெருங்கடலோ என் கண்முன்னே காணப்படாமல் உள்ளது."

இறுதிக்காலம்

இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது. நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது!
"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது"
       



Sunday, 5 November 2017

அணு

                                            

                                        அணு



                 அணு (atom) என்பது தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச் சிறிய அலகுப் பொருட்கூறு ஆகும்.[1] ஒவ்வொரு திண்மம், நீர்மம், வளிமம், பிளாசுமாவும் நொதுமல்நிலை அல்லது மின்னூட்டமுடைய அணுக்களைக் கொண்டுள்ளது. அணுக்கள் மிகவும் சிறியவை; கட்டாக அவை அளவில் மீட்டரின் 10 பில்லியனில் ஒரு பங்காகும். அதாவது ஆயிரம்கோடியில் ஒரு பங்காகும்.[2] என்றாலும் அணுக்களுக்கு நன்கு வரையறுத்த எல்லைகள் கிடையாது. அவற்றின் உருவளவை வரையறுக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவை வேறுபட்ட மதிப்புகளைத் தந்தாலும் மிக நெருக்கமான மதிப்புகளாக அமைகின்றன .
அணுக்கள் மிகச் சிறியவையாக உள்ளதால் செவ்வியற்கால இயற்பியல் சரியற்ற முடிவுகளையே தந்தது. இயற்பியல் வளர் வளர, நன்கு விளக்கி முன்கணிக்கும் குவைய நெறிமுறைகள் உருவாகின.
ஒவ்வொரு அணுவிலும் ஒரு மைய அணுக்கருவும் அதோடு கட்டுண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்மின்னிகளும் அமைந்துள்ளன. அணுக்கருவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்மின்னிகளும் அதையொத்த எண்ணிக்கையில் நொதுமிகளும் உள்ளன. நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் அணுக்கருனி எனப்படுகின்றன. ஏறக்குறைய 99.94% பொருண்மை அணுக்கருவிலேயே அமைந்துள்ளது. நேர்மின்னிகள் நேர்மின்னூட்டம் கொண்டுள்ளன. எதிர்மின்னிகள் எதிர்மின்னூட்டம் கொண்டுள்ளன. நொதுமிகள் மின்னூட்டம் அற்றவை. நேர்மின்னிகளும், எதிர்மின்னிகளுன் எண்ணிக்கையில் சம்மாக இருந்தால் அணு மின்னியலாக நொதுமல்நிலையில் அமையும். ஒரு அணுவில் நேர்மின்னிகளைவிட எதிர்மின்னிகளின் அளவு கூடினாலும் குறைந்தாலும் அணுவின் ஒட்டுமொத்த மின்னூட்டம் நேர் அல்லது எதிர்மின்னூட்டத்துடன் இருக்கும். இத்தகைய அணுக்கள் அயனிகள் எனப்படும்.
எதிர்மின்னிகள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளால் மின்காந்த விசையால் ஈர்க்கப்படுகின்றன. அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளும் நொதுமிகளும் ஒன்றோடொன்று வேறுவகைப்பட்ட அணுக்கரு விசையால் ஈர்க்கப்படுகின்றன. இது மின்காந்த விசையைவிட வலிமையானது. இது நேர்மின்னூட்டம் உள்ள நேர்மின்னிகளை நெருங்கிவிடாமல் பிரித்து விலக்குகிறது. சிலவேளைகளில் விலக்கும் இயல்புள்ள மின்காந்த விசை அணுக்கரு விசையைவிட வலிமையுற்று அணுக்கருவில் இருந்து அணுக்கருவன்களை வெளியேற்றும். இவ்வகை அணுக்கருச் சிதைவு, தனிம மாற்றத்தால் வேறுபட்ட தனிமத்தை மிஞ்சவைக்கும்.
அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அவ்வணு எந்த வேதித் தனிமத்தைச் சார்ந்த்து என்பதை முடிவு செய்கிறது: எடுத்துக்காட்டாக, அனைத்து செப்பு அணுக்களிளும் 29 நேர்மின்னிகளைக் கொண்டுள்ளன. நொதிமிகளின் எண்ணிக்கை அத்தனிமத்தின் ஓரிடத்தானை வரையறுக்கின்றன.[3] எதிர்மின்னிகளின் எண்ணிக்கை அணுவின் காந்த இயல்புகளை முடிவு செய்கிறது. அணுக்கள் வேதியியற் பிணைப்புகளால் ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறு எனும் வேதிச் சேர்மத்தை உருவாக்கலாம். அணுவின் பிணையும் அல்லது பிரியும் திறமே நாம் இயற்கையில் பார்க்கும் இயற்பியல்/புரநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இது வேதியியலால் ஆயப்படுகிறது.
புடவியின் அனைத்துப் பொருண்மமும் அணுக்களால் அமைவதில்லை. புடவியின் பெரும்பகுதி பொருண்மத்தைவிட (வானியல்)கரும்பொருளாலேயே அமைந்துள்ளது. அதாவது அணுக்களால் அமையாமல் நம்மால் இதுவரை அறியப்படாத துகள்களாலேயே அமைந்துள்ளது

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...